பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நினைவுக் குமிழிகள்-1 முல்லைமுகை நகையாளும் முடிவேந்த னும்மகனும் முழுதும் போன எல்லைஎலா மண அறையும் மலரணையும் உண்டோஎன்(று) இரங்கி வீழ்வார்; தொல்லைவிதிப் பயனாலே வந்திரந்த மாமுனிவன் சொன்ன வெல்லாம் இல்லைஎன ஈேெதாருக்கு இத்தனையோ பெரும்பேறு என்று ஏங்கி வீழ்வார்." கொண்டிருந்த வளநாடும் குறையாத பெருந்திருவும் கொடித்திண் டேரும் பண்டிருந்த மாளிகையும் பரிசனமும் தமக்களித்துப் பால னோடும் வண்டிருந்த தாரானும் வாணுதலும் வறியோர்போல் வனத்தே போகக் கண்டிருந்தும் விலக்காத கெளசிகனார் தம்மனமும் கல்லோ என்பார்." என்றெல்லாம் வரும் பல பாடல்களைப் பயிற்றும்போது தாம் அடையும் உணர்ச்சியை எல்லாம் என்னிடமும் தொற்றி விடுவார்; சரியான மனப்பக்குவம் எய்தப்பெறாத எனக்கும் அழுகை வந்துவிடும். பள்ளியின் வெளித்திண்ணையில் உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில ஊர்ப் பெருமக்களும் சாளரத்தின் வழியாக ஆசிரியர் கற்பிப்பதைக் கண்டு தாமும் மனம் நெகிழ்ந்து போனதைக் கண்டதுண்டு. 32. நகர் நீங், காண் 7. 33. டிெ-8,