பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரப் புராணம் பயின்றது 117 மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்திருக்கும் நண்பர்கள் மகிழ்ச்சியையும், மனவருத்தத்தால் பீடிக்கப்பெற்றுள்ள நண்பர்கள் துக்கத்தையும் நம்மிடம் தொற்றி விடுவர். கிளர்ச்சி பெற்றுள்ள மக்களுள்ள இடத்தில் நாம் இருக்கும் போது நம்மிடம் கிளர்ச்சி எழுவதற்குக் காரணம் இன்றேனும் அது நம்மிடம் எழுகின்றது. இவ்வாறு பிறருடன் ஒத்து உணக்கும் நிலைதான் ஒத்துணர்ச்சி என்பது, ஒட்ட உணர்தல் என்பது தன்னைப் பிறராகவே கருதி உணர்வது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை நடுத் தெருவில் உட்கார்ந்து கொண்டு விளையாடுகின்றது. ஒரு மோட்டார் விரைந்து அக் குழந்தையை நோக்கி வந்து கொண்டுள்ளது மோட்டார் தன்மீது ஏறிவிடும் என்ற அச்ச உணர்ச்சியே குழந்தைக்கு இல்லை. ஆனால் அதனைக் கண்ணுறும் நாம் குழந்தை நிலையில் இருந்து கொண்டு அச்ச உணர்ச்சியைப் பெறுகின்றோம். நாம் குழந்தையாகவே ஆகி விடுகின்றோம். நாம் ஒடிக் குழந்தையைத் துக்கவும் முயல்கின்றோம். இந்த உணர்ச்சியே ஒட்ட உணர்தல் என்பது. அரிச்சந்திரன் கதையைப் படிக்கும்போது நாம் கதையுடன் ஒன்றி அரிச்சந்திரனாகவும் ஆகிவிடுகின்றோம். அவன் நாட்டை விட்டு ஏகுவதைக் கண்டு மனமுடைந்து நிற்கும் மக்களில் ஒருவராகவும் ஆகிவிடுகின்றோம். கொடிமீது செறிதேரும் குஞ்சரமும் பொற்சிவிகைக் குழாமும் இன்றிப் படிமீது நடந்திடவும் படித்தனவோ பார்வேந்தன் பாதம் என்பார்; அடிமீது தொழும்.அரசர் முடிமீதும் மடிமீதும் அன்றிச் சுட்ட பொடிமீது நடந்திடவும் பொறுத்தனவோ குலகுமரன் பொற்றாள் என்பார்." 31. நகர் நீங் காண்.4,