பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நினைவுக் குமிழிகள்-1 என்று தொடரைப் படிக்கும்போதே அயோத்தி மக்களில் இவரும் ஒருவராகி விடுவார். குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்" என்ற முதுமொழிக்கு அரிச்சந்திரன் இலக்காகி விடுவதை எடுத்துக்காட்டுவதற்கும் இவர் தவறுவதில்லை. மயிரோடும் சிறைஇழந்த போகில்போல், வேலியொடு வரம்பி ழந்த பயிரே போல், கரமிழந்த கரியேபோல், பொறிஇழந்த பாவையே போல், உயிரேபோய்ப் பரிதவிக்கும் உடலேபோல், மத்தாலுள் ளுடைந்த லம்பும் தயிரேபோல், தளர்ந்தலைந்து தத்தமக்கு நிகழ்ந்தவெலாம் சாற்றலுற்றார். என்ற பாடலைப் படித்துக் கற்பிக்கும்போது நானும், அவரைப் பின்பற்றி அவர் நிறுத்திய இடத்தில் நிறுத்திப் படிக்க வேண்டும். போகில் போல், பயிரேபோல் கரியே போல், பாவையேபோல், உடலே போல், தயிரே போல் என்A) இடங்களில் எல்லாம் நிறுத்தி நிறுத்தி என்னைப் பார்த்துக் கொண்டே படிப்பார் நெஞ்சம் நெகிழ்ந்த நிலையில் படிப் +Jтгі. நாம் கவிதையை அநுபவிப்பதற்கு நம்மிடமுள்ள ஒத்துணர்ச்சியும் (Sympathy) ஒட்ட உணர்தலும் (Empathy) பெரும் பங்கு பெறுகின்றன என்பர் உளவியலார். உணர்ச்சிப் பெருக்கால் உள்ளம் பூரித்திருக்கும் பிறரைக் காணும் பொழுது நம்மிடமும் அதே உணர்ச்சி எழுதல் இயற்கை. 30. வெ. வே. 50