பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரப் புராணம் பயின்றது 115 தலமுழுதும் தவமுனிவன் றனக்களித்தேம் இனியுறைதல் தகுதி அன்றென்று இலகுமணி மண்டமும் எழில்மணிச்சிங் காதனமும் இழிந்து போந்து பல அரச ருடன் அமைச்சர் அழுதுடன் போய்ப் பரதவிக்கப் பதாதி மொய்க்கக் குலமகனும் மடமயிலும் முன்நடக்கப் பின் நடந்தான் கொற்ற வேந்தன்."" என்ற பாடலை அவருக்கே உரிய கிரீச் குரலுடன் படிக்கும் போதே தம்மை மறந்து கண்ணிர் சொட்ட விடுவார். மனப் பக்குவம் அடையும் அகவையை எட்டாததால் அவர் கண் ணிர் விடுவதன் பொருளை உணர முடிவதில்லை. அரசன் பிரிவைக் கண்டு அலமந்து இரங்கும் மக்கள் நிலையைக் காட்டும் பல பாடல்களைப் படித்துக் கற்பிக்கும் போது தம்மை மறந்த நிலையில் குரல் தழுதழுத்த நிலையை அடைந்து விடுவார். தொடைதுறந்து முடிதுறந்து பணிதுறந்து துடிமுரசும் துறந்து தாமக் குடைதுறந்து வெண்கவரிக் குழாம்துறந்து கரிபரிதேர்க் குலந்து றந்து கடைதுறந்து மறுகணைந்த காவலன்தன் திருமுகத்தைக் கண்டோ ரெல்லாம் அடையமனம் அழிந்துருகி அவரவரே முகத்தில்அறைந் தழுவார் ஆனார்' "துறந்து' என்ற சொல் பாடலில் வருவதை அழுத்தம் கொடுத்துப் படித்து அடிக்கடி என்னை நோக்குவது இன்றும் எனக்குப் பசுமையாகவே உள்ளது. 'அழுவார் ஆனார்’ 28. நகர்நீங். காண். 1 29. டிெ-2.