பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நினைவுக் குமிழிகள்-1 நேருக்கும் வீடா மனு நூல்நெறிக் கும்பொறைக்கும் ஆருக்கும் மிக்கான் அரிச்சந்திரன் ー劉@ ம்’ 2 3 என்று அடித்துப் பேசுகின்றான். இதைக் கேட்ட கோசிகனுக்கு மனம் தாங்க முடிய வில்லை. வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன் பொய்யன் நிறையும் பொறையும்.சிறி தும் மில் புல்லன் கையன் கபடன் கயவன் றனை நல்லன் என்றிவ் ஐயன் திருமுன் உரைத்தாய் இது.ஏன் ஆக' என்று மொழிகின்றான். எப்படியாயினும், தன் கருத்தை நிலை நிறுத்த முனைகின்றான் தவ வலிமை மிக்க விசுவாமித்திரன் என்று கூறி கதைத் தொடர்பைக் காட்டு வார் வேலூர் வாத்தியார். வஞ்சனைக் காண்டம், வேட்டஞ்செய் காண்டம் இவற்றின் கதைப் பகுதிகளை விளக்கி விடுவார்; பாடல்களைப் படிப்பதில் நாட்டம் செலுத்தாது அவற்றை ஒதுக்கி விடுவார். நகர் நீங்கிய காண்டத்தில், அரிச்சந்திரன் கோசிக முனிவர்க்கு நாடு நகரங்களைக் கொடுத்த பின்பு தன் மனைவி மைந்தனுடன் அந்நகரத்தை விட்டு நீங்கிச் செல்லும் காட்சிகளை நுவலும் பாடல்களில் ஆழங்கால்பட்டு அவற்றை மிக உருக்கமாகக் கற்பிப்பார். அரசன் சென்ற காட்சியைக் காட்டும், 26. இந்தி. காண்-33 57.@ു.-35