பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரப் புராணம் பயின்றது 113 புராணம் கற்பித்தார்: அதனைத் தனித்தனியாகவும் கற்பித்தார். அநேகமாக வாரத்தில் மூன்று நாட்கள்தான் அரிச்சந்திரப் புராணம் கற்றதாக நினைவு. அரிச்சந்திர புராணத்திலும் எல்லாப் பாடல்களையும் கற்பிப்பதில்லை. கதையை நன்கு விளக்கிவிட்டு சுவையான சில பகுதிகளையே தேர்ந்தெடுத்துக் கற்பிப்பார். நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு இவற்றில் சில பாடல்கள், விவாக காண்டத்தில் சில பாடல்கள், குறிப்பாக அரிச்சந்திரனின் திருமணப் பகுதியில் சில பாடல்கள் மட்டிலுமே கற்றதாக நினைவு. இந்திர காண்டத்தில் சில பாடல்கள் கதைத் தொடர்புக்காகப் படிப்பித்ததாக நினைவுகூர முடிகின்றது. வசிட்டனுக்கும் கோசிகனுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் சிரமப்பட்டவன் அரிச்சந்திரன் என்பதை எங்கள் சிறு உள்ளங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கு வார். இந்தக் கடல் சூழ்ந்த பூமியில், வாய்மைக்கு நன்னூல் வளனுக்கு மனத்தி லுற்ற தூய்மைக்கும் மிக்கார் தமைஆய்ந்துநீர் சொன் மின்' என்று இந்திரன் வினவுகின்றான். இந்திரன் அவையிலிருந்த பல முனிவர்களுள் வசிட்டன் எழுந்து, 'பாருக் கொருவன் பரதார சகோத ரன்வெம் போருக் கொருவன் புகழுக்கு மறைப்பொ ருட்டு 25. இந்தி, காண் 31 –8—