பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அரிச்சந்திர புராணம் பயின்றது களே இக்கருத்துகளை ஒரளவு கடைப் பிடித்ததாகத் தெரி கின்றது. இவரை அடுத்து வேலூர்வாத்தியார் இக்கருத்துகளை ஒரளவு நடைமுறையில் காட்டினார் என்பதை அறிய முடி கின்றது. இந்த இருவரும் கருவிலே திருவுடைய ஆசிரியர்கள். தம் சிறார்களின் கல்வியில் அக்கறை கொண்ட பெற்றோர் களும் ஓரளவு இக்கருத்துகளை அறிந்து செயற்படுதல் மிகவும் இன்றியமையாதது. குமிழி-14 அரிச்சந்திர புராணம் பயின்றது முன்னொரு குமிழியில் வேலூர் வாத்தியார் அரிச் சந்திரபுராணம் கற்பித்தல் பற்றிய கருத்து எழுந்து அப்படியே அடங்கிப் போயிற்று. அது மீண்டும் ஈண்டு எழுகின்றது. மாணாக்கர்களில் பெரும்பாலோர்க்கு வாக் குண்டாம், நல்வழி, நன்னெறி முதலிய நூல்களைக் கற்பிப்பதுடன் நிறுத்திக் கொள்வார். பெரும்பாலோர்க்கு அவையே மிகவும் பழுவாய்ப் போய் விடும். கற்பதில் ஆசை கொள்பவர்க்கு மட்டிலுமே சதகங்கள். புராணங்கள் இவற் றைக் கற்பிப்பார். நான் பயின்றபொழுது ஒரு நாலைந்து பேருக்கு மட்டிலுமே அரிச்சந்திரபுராணம் கற்பித்ததாக நினைவு. குத்து மதிப்பாகவே இவர்கட்கு இது தகும்’ என்று அளந்து அறுதியிடுவதில் வல்லவர் வேலூர் வாத்தியார் . குருவித் தலையில் பனங்காயைக் கட்டித் திறமையற்றவர் கட்குத் தொந்தரவு கொடுப்பதில்லை. இப்போதுள்ள கல்வி முறையில் மேல் வகுப்புகளில் விருப்பபாடம் (Optionals) என்ற ஒரு முறை இருக்கின்றதல்வலா? இத்தகைய ஒரு சிேறையையே வேலூர் வாத்தியார் மேற்கொண்டவராத லால் தேர்ந்தெடுத்த ஒரு சிலர்க்கு மட்டிலும் 'அரிச்சந்திர