பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியமுறைக் கல்வி III மூலம் செய்திகளை அறிவதில் ஊக்கம், பொருள்களைப் புனைவதில் விருப்பம், கருத்துகளைக் கலை உணர்வுடன் கூறுவதில் ஆசை ஆகிய நான்கு பண்புகளும் குழந்தைகளிடம் இயல்பாக அமைந்தவை என்றும், இவைதாம் குழந்தையின் விரைவான வளர்ச்சிக்கு இயற்கையாக அமைந்த மூலதனம் என்றும் இவர் மொழிவர். கற்றலில் அடங்கிய படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகிய மூன்று செயல்களும் மேற் கூறிய பண்புகளையொட்டி அமையவேண்டும் என்பது இவருடைய கொள்கை. கல்வித்துறையில் தாம் எழுதியுள்ள நூல்களிலும் இதே கருத்தைத்தான் இவர் மீண்டும் வற்புறுத்தி உரைப்பார். இவண் கூறிய கருத்துகளை ஒருங்கே வைத்துச் சிந்தித் தால் கல்வி முறைகள் இரண்டு பிரிவுகளில் அடங்கும் என்பது தெரியவரும். ஒன்று, அக நிலையை ஒட்டியது: இன்னொன்று புறநிலையைத் தழுவியது. ஒன்று உளவியலை அடிப்படை யாகக் கொண்டது; இன்னொன்று சமூக இயலைச் சார்ந்தது. சிலர் அகநிலைக் கல்வியே சிறந்தது என்றும், சிலர் புறநிலைக் கல்வியே உயர்ந்தது என்றும் கூறுவர். அக நிலைக் கல்வியை வற்புறுத்துகின்றவர் உள்ளத்தின் வளர்ச்சியை முக்கியமாகக் கொள்கின்றனர். புறநிலைக் கல்வியை விரும்புகின்றவர் வெளியுலக அறிவிற்குச் சிறப்பு தருகின்றனர். கூர்ந்து ஆராய்ந்தால் உண்மை இரண்டு எல்லைக்கும் இடைப்பட்டது என்பது தெரியவரும். எனவே, கல்வி கற்பித்தலில் அகநிலைக் கல்வியையும் புறநிலைக் கல்வியையும் தேவைக்கேற்ற அளவு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியவரும். இங்ங்ணம் பல அறிஞர்கள் கல்வித்துறையில் சிந்தித்ததின் விளைவாகப் பல கற்பிக்கும் முறைகள் உருவாயின. இப்போது சிந்தித்துப் பார்த்தால் எனக்குக் கீழ் நிலை யில் கற்பித்த ஆசிரியர்களுள் திரு. இலிங்கிசெட்டியார் அவர்