பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நினைவுக் குமிழிகள்-1 இவர் பாட்டுகள் வாயிலாகவும், படைப்பாற்றலின் துணை கொண்டும் எய்துவிக்கலாம் என்றும் கருதினார். மாண்டிசாரி (கி, பி. 1870-1952) : இத்தாலி நாட்டைச் சார்ந்த இந்த அம்மையார் ஃபிராபெல்லைப் போலவே குழந்தைகளை வளரும் செடிகளாகக் கருதினார். குழந்தை களின் புலன்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைக் கூர்த்த மதியினராக்கலாம் என்று இவர் கருதினார். இக்கருத்தைச் செயல் முறையிலும் மெய்ப்பித்துக்காட்டிப் பெரும் புகழ் பெற்றார். இன்று பல்வேறு இடங்களில் அம்மையாரின் கொள்கைகளைத் தழுவிப் பல குழந்தை நிலையங்கள் தோன்றி நடைபெற்று வருவதைக் காண்கின்றோம். ஜான்ட்யூயி (கி. பி. 1859-1952) . இவர் அமெரிக்க நாட்டைச் சார்ந்தவர். கல்வித்துறையில் புதியதோர் ஊழியைத் தொடங்கினவர். பிற்கால வாழ்க்கையைக் குழந்தை பள்ளியிலேயே ஓரளவு கண்டு கொள்ள வேண்டும் என்பது இவர் கொள்கை. இயக்கம், குழந்தைப் பருவத்தின் இயல்பாதலால், குழந்தை செயலுக்குத் துடித்து நிற்கின்றது. குழந்தை, பள்ளியில் பெறும் பட்டறிவு (அநுபவம்) அதனிடம் இயல்பாக அமைந்த இயக்கப் பண்புகளையையும் கவர்ச்சி களையும் ஒட்டியிருத்தல் வேண்டும். பள்ளிவாழ்க்கை இம் முறையில் அமைந்தால், குழந்தையின் கல்வி சிறக்கும். இதைத் தெளிவாக உணர்ந்த ட்யூயி கற்றல் செயல் முறையில் அமைய வேண்டும் என்ற கொள்கையைக் கண்டு அதை நாடெங்கும் பரப்பினார். ஒர்வித அநுபவமுமின்றிச் செய்திகளைக் குழந்தை கற்பதை இவர் அடியோடு வெறுத்தார். ஜான் ட்யூயி குழந்தையின் இயற்கைக் கவர்ச்சிகளை நான்கு விதமாகப் பகுத்துக் கூறுவார். உரையாடுவதன் மூலம் கருத்துகளைத் தெரிவிப்பதில் ஆர்வம், வினாக்களின்