பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியமுறைக் கல்வி 109 ஹெர்பார்ட் (கி. பி. 1776-1841) . இவர் மனத்தைப்பற்றி நன்கு ஆராய்ந்தவர். மனம் செயற்படுவதைப்பற்றிய பல உண்மைகளைக் கண்டவர். மனம் எவ்வாறு வெளியுலக அநுபவத்தை வாங்கிக் கொண்டு தன் வயமாக்கிக் கொள்ளு கின்றது என்பதை ஒரு கொள்கையாக விளக்கம் தந்து, கற்பித் தலின் ஐந்து படிகளை உலகிற்கு உணர்த்தினார். இந்த ஐந்து படிகளின் வழியாகத்தான் மனம் வெளியுலக அநுபவத்தைப் பெறுகின்றது என்பது ஹெர்பார்ட் நமக்குக் காட்டிய உண்மை. மனத்தைத் தயாரித்தல், எடுத்துக் கூறல், ஒப்பிடல் பொதுவிதி காணல், விதியைச் செயற்படுத்தல் ஆகியவையே Gogoń Lisri L14.6%r &#5, U14.5 sit (Herbartian five steps) ஆகும். இப்படிகளை அறிந்தோ அறியாமலோ பல அறிஞர் கள் கற்பித்தலில் கையாண்டபோதிலும் இவற்றை வனரயறை செய்து உலகிற்கு முதன்முதலாக உணர்த்திய பெருமை ஹெர்பார்ட்டையே சாரும். இந்த ஐந்து விதிகளும் உளவியலின் அடிப்படையில் அமைந்தவை. ஃபிராபெல் (கி. பி. 1782-1852) . இவர் இயற்கை அன்னையும் மனிதனும் ஒன்றாக இருந்து கொண்டு இறைவ னுடைய திருவுளத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று நம்பினார். எனவே, குழந்தைகளின் ஆற்றல்கள் மலர்ச்சி யடைதல் இறைவன் திருவுளக் குறிப்புப்படி நிறைவேறுவதால் இவை தவறாகா என்று நம்பினார். எனவே, இயற்கையை யொட்டி கல்வி கற்பித்தல் நடைபெற வேண்டும் என்பது இவர் கருத்தாகும். இவர் கொள்கைப்படி பள்ளி என்பது குழந்தைகளின் பூங்கா; பள்ளியில், கல்விபயிலும் குழந்தைகள் பூங்காவில் வளரும் செடிகள்,குழந்தைகளைக் கண்காணிக்கும் ஆசிரியர்; செடிகளைப் பாதுகாக்கும் தோட்டக்காரரைப் போன்றவர். எனவே கற்கும் குழந்தைகள் தாமாகச் செயற் பட்டும், கருத்துகளைத்தாமாக வெளியிட்டும் வளர்ச்சி எய்த வேண்டும் என்பது ஃபிராபெலின் விருப்பமாகும். இவற்றை