பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல்கள் 123 ஆகும். கடவுளால் கொடுக்கப்பட்டுத் தான் பிறக்கும்போறே உடன் தோன்றிய மங்கலநாண் இது. இது ஒரு புலையனால் காணப்பட்டது குறித்து மிகவும் வருந்தினாள். 'என் கணவனாகிய அ ரி ச் ச ந் தி ர மன்னனுக்குக்கல்லாமல் மற்றொருவர்க்கும் தோன்றாத என் மங்கலநாண் இன்று புலையனாற் காணப்பட்டதே! இது பொல்லாத காலம் போலும்!” என்று கூறி அனலில் பட்ட மெழுகுபோல் உருகி வருந்தினாள்' என்று விளக்குவார். காந்தியடிகள் சிறுவயதிலேயே அரிச்சந்திரன் கதை கேட்டு மனம் மாற்றம் அடைந்ததாகச் சொல்வதுண்டு. வேலூர் வாத்தியாரும் சிறுவர்களின் பிஞ்சு மனத்தில் இத்தகைய உயர்ந்த கருத்துகளை விதைத்ததை இன்று நினைந்து பார்க்கின்றேன். புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டுள்ள ஊர்ப் பெருமக்களில் சிலர் சாளரத்தின் வழியாகத் தான் கற்பிப்பதைக் கண்ணுற்று மகிழ்வதை வேலூர் வாத்தியார் காணும்போது அவரது உற்சாகம் பன்மடங்கு மிகும். சோதிடத்தால் புகழ்பெற்றுத் திகழ்ந்த வேலூர் வாத்தியார் அரிச்சந்திர புராணம் கற்பித்தலிலும் ஊர்ப்பெருமக்களின் மதிப்பிற்கும் உரியவராக விளங்கினார். அக்காலத்தில் சிற்றுார்களில் வேலூர் வாத்தியார் போன்ற சில ஆசிரியர்கள் திகழ்ந்ததை இன்றும் பல பெரியோர்கள் பேசிவருவதைக் கேட்டிருக்கின்றேன். காரைக்குடியில் நான் பணியாற்றியபோது சா. கணேசன், சொ. முருகப்பா, ராய. சொக்கலிங்கன் போன்ற பெரியோர்களும் தமக்குத் தமிழ்க் கற்பித்த சிதம்பர அய்யரைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டதுண்டு. இன்றும் சிற்றுார்ப் பெருமக்களிடம் பேச்சுக் கொடுத்தால் இத்தகைய புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை அறிந்து மகிழலாம். பெரகம்பியில் திண்ணைப்பள்ளியில் பயின்றபோது சதகச் செய்யுட்களைக் கற்பித்துப் பெரும்புகழ் பெற்ற இலிங்கிச் செட்டியாரும் இப்போது என் நினைவிற்கு வருகின்றார்.