பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-16 16. தனியார் பள்ளிக்கு மாற்றம் ஓராண்டுக்குமேல் சுப்பராய உடையாரிடம் ஆங்கிலம் கற்றேன். தொடக்கத்தில் உற்சாகமாகத்தான் கற்பித்தார். நாளடைவில் அவர் பயிற்றியதில் சென்று தேய்ந்திறுதல்’ பண்பு தலைகாட்டத் தொடங்கியது. கற்பித்தலில் கவனம் செலுத்துவதைவிட மருத்துவத்தில் அதிக அக்கறை காட்ட லானார். மாலை நேரத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் என்ன நோயோ, இறை வனுக்குத்தான் வெளிச்சம்! சளசள வென்று ஒவ்வொரு வரிடமும் தனித்தனியாகப் பேசி அவர்களை அனுப்பு வதற்கும், மருந்து தயாரிப்பதற்குச் சிறு தொகைகளைய் பேரம்பேசி வாங்குவதற்குமே நேரம் சரியாக இருந்தது. பத்துப் பன்னிரண்டு பேர் ஒருவரை ஒருவர் விழித்துநோக்கிக் கொண்டு வாளா காலம் கடத்தினோம். இதற்குள் இரவு எட்டு, எட்டாை ஆகி விடும். தொடக்கக் காலத்தில் எந்த மொழியைக் கற்பித்தாலும் கற்பிக்கும் முறைப்படி கற்பித் தால் ஆசிரியரும் மாணாக்கர்களும் அதிகமாக ஊடாட வேண்டும். வாய்மொழிப் பயிற்சியிலும் எழுத்துப் பயிற்சி யிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். கற்றலில் மாணாக்கர்கட்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; ஒவ்வொரு நிலையிலும் கற்றலின் பயனை அவர்கள் அறியச் செய்தல் வேண்டும், முறைப்படி கற்பிக்காவிட்டாலும், கற்றலின் பயனை மாணாக்கர்கள் உணர்ந்தார்கள் இலர். மாணாக்கர் களும் இவரிடம் ஆங்கிலம் பயில்வது வீண் என்பதை உணரத் தொடங்கினர். ஏதோ கடனுக்கு வந்து போகின்றோம்: என்ற எண்ணம்தான் தலை தூக்கி நின்றது. ஆங்கிலம் கற்றலில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இந்நிலையில் வேறோர் நிகழ்ச்சி நடைபெற்றது. "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான்' 38. பா. க. கண்ணன் என்சேவகன் அடி 14.