பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனியார் பள்ளிக்கு மாற்றம் 125 என்று கண்ணன் கூறியதைப் பாரதியார் காட்டுவதுபோல் முன்பின் தெரியாத சாமுவேல் பிள்ளை என்ற பெயர் கொண்ட ஒருவர் எங்களுருக்கு வந்தார். சில செல்வர்களைப் பார்த்துத் தாம் ஆங்கிலம் கற்பிப்பவர் என்றும், குறைந்தது பத்து அல்லது பதினைந்து சிறுவர்களைச் சேர்த்துத் தந்தால் தம் பணியைத் தொடங்கலாம் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார். மயன் வேலைதான். செல்வர் ஒருவர் வீட்டுப் பெரிய திண்ணையொன்றில் ஆங்கிலப் பள்ளி தொடங்கப் பெற்றது. திண்ணையும் அதன்கீழ் உள்ள தாழ்வாரமும் சேர்ந்து 30 பேர் பயில்வதற்கேற்ற இடமாயிற்று. மூங்கில் தட்டிகளைக் கொண்டு தாழ்வாரத்தில் மறைப்பு ஏற்படுத்தப்பெற்றது. தாழ்வாரத்தில் இரண்டு பெஞ்சுகள் போடப்பெற்றன. உட்காருவதற்குப் பத்துப் பேருக்குப் போதும் இவை. ஆசிரியருக்குத் தாழ்வாரத்தில் ஒரு நாற்காலி போடப் பெற்றது. ஒரு சிறு மேசையும் சரிக்கட்டப் பெற்றது. இருபது பேர்கட்குமேல் சேரவில்லை. செல்வர் வீட்டுப் பிள்ளைகள் மட்டிலுமே சேர்ந்தனர். காரணம், ஒவ்வொருவரும் மாதம் ஒன்றரை ரூபாய் கட்டணமாகவும், ஆண்டிற்கு ஒரு மூட்டை நெல்லும் தரவேண்டும். இவை சாதாரண நடுத்தரக் குடும்பத்தினருக்கு அக்காலத்தில் பளுவாகவே இருந்ததும் ஆசிரியர் மிக உற்சாகமாகக் கற்பித்தார். 20 மாணாக்கர்கட்கு மேல் சேரவில்லை என்பது நினைவு. எல்லோரிடமு: குறுகிய காலத்திலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. புதிய கதிரோன் : சுப்பராய உடையாரின் புகழ் இறங்கு முகமாகவும் சாமுவேல் பிள்ளையின் புகழ் ஏறு முகமாகவும் இருந்தன. இந்நிலையில் நானும் என் அண்ணார் மகன் கணபதியும் வேறு சிலரும் சாமுவேல் பிள்ளையிடம் வந்து சேர்ந்தோம். ஓராண்டுக் காலத்தில் நல்ல முன்னேற்றம்