பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நினைவுக் குமிழிகள்-1 கண்டோம். ஆங்கிலத்தில் நல்ல அடிப்படையை எங்களிடம் ஏற்படுத்தி விட்டார். ஆனால் அவரிடம் படித்தவர்களுள் ஒருவர் கூட உயர்நிலைப் பள்ளியை எட்டிப் பார்க்கவே இல்லை. என் தம்பி கணபதி மட்டிலும் உயர்நிலைப் பள்ளி யில் என்னுடன் பயின்றான்.ஆனால் அவனும் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற வில்லை Higher Grade Training பயின்று ஆசிரியப் பணியில் இறங்கினான். பின்னர்க் கரந்தை யில் புலவர் வகுப்புப் பயின்று அதில் தேறித் தமிழாசிரிய ரானான். நான் மட்டிலும் என் நல்வினைப் பயனால் எவ்வளவோ இக்கட்டுகளிடையே கல்லூரி வாழ்க்கையை முடித்து நல்ல பதவிகளை வகித்து இன்று இதை எழுதும் வரை நல்ல உடல் நிலையுடனும் மனவளத்துடனும் இருக் கின்றேன். சாமுவேல் பிள்ளையவர்களும் எங்களுரில் குடும்பத் துடன் தங்கி வசதியுடனும் புகழுடனும் திகழ்ந்தார். என்ன காரணத்தால் அவர் இந்த ஊரைவிட்டுப் போனார் என்பது அன்றும் எனக்குத் தெரியவில்லை. இன்றும் ஊகித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இருந்தவரை "நல்லாசிரியன்' என நாங்கள் மகிழும் வண்ணம் கற்பித்தார். இவர் ஊர்ப் பெருமக்களிடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. புரோநோட்டு எழுதுதல், கடிதங்கள் எழுதுதல் போன்ற பணிகளும் இவரை வந்தடைவதில்லை. எல்லோரிடம் நன்கு பழகத்தான் செய் தார். எனினும் பட்டுக்கத்தரித்த மாதிரி சுருக்கமாகப் பேசித் தம்மைக் கத்தரித்துக் கொள்வார். சாமுவேல் பிள்ளை ஊரைவிட்டுப் போனதும் சில செல்வர் வீட்டுப் பிள்ளைகள் தம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இராச மாணிக்கம் என்னும் வைசியச் சிறுவன் மளிகைக் கடையில் உட்கார்ந்து கொண்டான். வேறு சிலர் பண்ணை வேலைகளைக் கவனிக் கப் போய்விட்டனர்.