பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனியார் பள்ளிக்கு மாற்றம் 127 நான், சிதம்பரம், இராமுடு, (பிராமணன்) கி. இராச கோபால், ச. கணபதி, மு. துரைசாமி, மு. நாராயணசாமி, இராசமாணிக்கம், இராதா, இராமுடு (வைசியன்) ஆகியோர் மட்டிலுமே படிப்பைத் தொடர்ந்தோம். இந்நிலையில் சுப்பராய உடையார் மாற்றலாகிவேற்றுார் சென்றுவிட்டார். வேலூர் வாத்தியாரும் ஒய்வு பெற்றுவிட்டதாக நினைவு. தனியாக ஒருசில பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திவந்ததைப் பார்த்திருக்கின்றேன். இறுதிவரையிலும் நல்ல புகழுடன் திகழ்ந்தார் என்பதை இன்றும் நினைந்து பார்க்கமுடிகின்றது. இந்தநிலையில் உதயசூரியன்’ என்று சொல்லும் வகையில் வி.கே. அரங்ககாத அய்யர் என்ற ஒரு நல்லாசான் இந்த ஊருக்கு மாற்றலாகிவந்து சேர்ந்தார். அவர் பத்தாண்டு கட்குமேல் எங்களூரிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றார். நான் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு துறை யூரில் நானே நிறுவிய உயர்நிலைப் பள்ளித் தலைமையா சிரியனாகச் சேர்ந்துபணியாற்றும் வரையில் எங்களுரிலேயே பணியாற்றிவந்தார். இளம்வயதிலேயே ஓர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய நிலையைக் கண்டு உள்ளங்குளிர மகிழ்ந்தவர்கள் மூவர். ஒருவர் எனக்கு வசிட்டர்போல் குலகுருவாக விளங்கிய வி. கே. ரங்கநாத அய்யர்; மற்றொருவர் "நான் நல்ல உயர்கல்வி பெற்று நல்ல உயர்பதவிகளைப் பெறுவேன்’ என்பதாகச் சோதிடம் கூறி என் அன்னையை மகிழ்வித்துக் கொண்டிருந்த வேலூர் வாத்தியார். துறையூரிலிருந்து ஊருக்கு வரும்போதும் ஊரிலிருந்து துறையூருக்குத் திரும்பும்போதும் வேலூர் வாத்தியாரைப் பார்த்து வணக்கம் சொல்லும்போதெல்லாம் அவ உள்ளம் குளிர்ந்து மகிழ்வதை அவர் முகத்தில் காண்பேன். ஒரு தந்தையின் பாசம் அவர் முகத்தில் ததும்பி ஊற்றெடுப்பதைக் கண்குளிரக் கண்டு ஆனந்தக்