பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நினைவுக் குமிழிகள்-1 கண்ணிர்த்துளிகளைச் சொட்டுவேன். மூன்றாவது பெரியார் இலிங்கச் செட்டியார். என் வெளியூர்ப் படிப்புக் காலத்தில். பத்தாண்டுகள்-அவரைக் காணவாய்ப்பே இல்லை. காரணம் பெரகம்பிக்குப் போய்வரும் வாய்ப்பே எனக்கு ஏற்பட் வில்லை. துறையூரிலிருக்கும் போது என்னைப் பார்ப்பதற் கென்றே ஒரு முறை பெரகம்பியிலிருந்து துறையூருக்கு வந் தார். நடந்தே 10மைல் வரவேண்டும். அப்போது திண்ணைப் பள்ளிக்கூடப்பணி அவருக்கு இல்லை. வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு போவதில் கஷ்டநிலையை அநுபவிப்பதைச் சொல் லித் தீர்த்தார். உயிரனைய மனைவி மறைந்ததையும் முதல் மனைவியாரோ உறவினர் பிள்ளையாகக் கூட்டிக் கொண்டு ஆத்தூரில் சகமாக இருப்பதையும், இரண்டாவது மகன் உதவாத பையனாகித் தனக்குச் சுமையாக இருப்பதையும், தாம் தாழை மடலாலாகிய இலை தைத்து அதில் வரும் சிறு வருவாயைக் கொண்டு வாழ்வதையும் அழாக்குறையாகச் சொல்லி விசனப்பட்டார்.நான் அவருக்கு ஒர் உணவுவிடுதியில் விருந்து வைத்து ஒரு சோடி வேட்டிவாங்கி அத்துடன் ரூபாய் பத்தும் வைத்துத்தந்து ஊருக்கு அனுப்பிவைத்தேன். ஐம்பது ரூபாய் மாத ஊதியத்தில் அதற்குமேலும் என்னால் செய்ய முடியவில்லை. அதன்பிறகு அவரைப் பார்க்கவே இல்லை. அவர் இறந்த செய்திதான் என்னை வந்தடைந்தது. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” என்ற குறள் நினைவுக்கு வந்தது. ஒரு தந்தையைப் பிரியும் உணர்வு அப்போது என்னிடம் எழுந்தது. என் தந்தை இறந்தபோது அந்தப் பிரிவை உணரும் வயது எனக்கு இல்லை யல்லவா? 39. குறள் - 336