பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-17 17. என் கல்வி முன்னேற்றத்தில் எழுஞாயிறு வி. கே. அரங்கநாத அய்யரை 'உதய சூரியன்’ என்று குறிப்பிட்டேன் அல்லவா? ஆம்; உண்மையில் உதய சூரியன் - எழுஞாயிறுதான் அவர். அவர் வந்த பிறகு ஊரில் ஆங்கிலக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாயிற்று. பலருக்கு நல்ல ஆங்கில அறிவு ஏற்பட்டதுடன், இக்காலக் கல்வி முறையில் உள்ள எல்லாப் பாடங்களையும் முறையாகக் கற்பிக்கலாயினர். புவியியல், வரலாறு, அறிவியல் என்ற பாடங்களிலும் கருத்தைச் செலுத்தினார்; இவற்றில் பாட நூல்கள் வாங்கச் செய்து கற்பிக்கத் தொடங்கினார். ஆகவே, இவரை உதயசூரியன் என்று சொல்லுவதைவிட "ஞானக் கதிரவன்' என்று கூறுவதும் மிகப் பொருந்தும். நன்றாகக் குளித்து, நெற்றியில் இட்டு வரும் கோவிச்சந்தனப் பொட்டும் கண்ணொளியும் இவரது பொன்னிற மேனிக்கு மேலும் பொலிவினைத் தந்தன. இவரது தோற்றமே மாணாக் கர்களை நன்கு கவர்ந்தது. சாமுவேல் பிள்ளை சென்ற பிறகு ஊர்க்கல்வியில் களப்பிரர் ஆட்சி போன்ற ஒருகுழப்ப நிலை ஏற்பட்டது. செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகளில் பெரும்பாலோர், என் போன்ற நடுத்தர வகுப்புப் பிள்ளை ஒரிருவருக்குப் புதிதாகப் பிழைப்பின் நிமித்தம் வந்த ஆசிரியர் ஒருவரிடம் கல்வி பயின்றோம். அவர் பெயர் நினைவு இல்லை. கணபதியின் வீட்டுத் திண்ணையில்தான் கல்வி பயிற்றல் நடைபெற்றது. கழுத்தில் ஒர் உருத்திராக்க மணியுடன் காணப்பட்ட இந்த ஆசிரியரிடம் உற்சாகமே இல்லை. மூன்று அல்லது நான்கு பேருக்குமேல் சேராமை ஒரு காரணமாக இருக்கலாம். இவரும் இரண்டு மாதத்திற்கு மேல் தங்காமல் சென்று விட்டார். سہ 9-سم