பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நினைவுக் குமிழிகள்-1 இந்நிலையில் நானும் கணபதியும் வி. கே. அரங்கநாத அய்யர் ஆசிரியராகத் திகழும் பள்ளிக்கே வந்து சேர்ந்தோம் இவரும் வீட்டில் முன்னிரவு நேரத்தில் சிலருக்குத் தனிப் பயிற்சி அளித்தார். சுப்பராய உடையார் தங்கியிருந்த வீடே இவருக்குக் கிடைத்தது. நல்ல விசாலமான வீடு. இதில் முன்புறம் அகலமான இரண்டு திண்ணைகள் திண்ணைக்கு முன்புறம் விசாலமான வாசல். இடமும் மாணாக்கர் நடமாடுவதற்கும் அவர்களின் உடல்நலத்திற்கு உகந்ததாகவும் இருந்தது. வி. கே. அரங்கநாத அய்யர் விரும்புவோருக்கு வடமொழியும் கற்பித்தார். நானும் நான் ைக ந் து பேரும் வடமொழியும் சில ஆண்டுகள் பயின்றோம். ஆனால், இதில் அதிகமான அக்கறை செலுத்த வில்லை. ஆங்கிலத்தைத்தான் அழுத்தமான அக்கறையுடன் பயின்றோம். ஏனைய பாடங்கள் பள்ளியில் நன்றாகப் பயிற்றப் பெற்றன. இவர் தமிழ்ப்பாடத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. இவர் உயர் நிலைப் பள்ளியில் தமிழ் சரியாகப் பயிலவில்லைபோலும்! பாடம் ஒன்றிலேயே ஈடுபாடு : வி. கே. அரங்கநாத அய்யருக்கு பாடம் பயிற்றலைத்தவிர வேறு தொழிலில் ஈடுபடவில்லை. இவருக்குச் சோதிடமோ, மருத்துவமோ தெரியாது. சிற்றுாராதலால் வேறுவழி இல்லாத பெரு மக்களில் சிலர் பள்ளியாசிரியர்களின் உதவியை நாட வேண்டியவர்களாயினர். இவரும் புரோ நோட்டு எழுதுதல், கடிதங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுச் சிரமதானம் செய்தார் என்றாலும், இப்பணிகளை இவருக்கு முன்னிருந்த ஆசிரியர்கள்போல் பள்ளிநேரத்தில் செய்வதில்லை. அவர்கள் யாவரும் பள்ளி நேரத்திலேயே பள்ளிக்குள் நுழைந்து தங்கள் வேலைகளை முற்றுவித்துக் கொள்வர். வி. கே. அரங்கநாத அய்யரோ பெருமக்களிடம் அவர்கள் மனம் கோணாது இனிமையாகப் பேசி நாலரை