பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்வி முன்னேற்றத்தில் எழுஞாயிறு 131 மணிக்குமேல் அவர்களை வருமாறு செய்து வேண்டிய உதவிகள் செய்து அனுப்புவார். இவர் காலத்தில் பள்ளி வேலையில் நல்ல ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப் பெற்றது. இந்த நாளில், இந்த நேரத்தில், இந்தப்பாடம்தான் பயிற்று வது என்ற பாடவேளைப்பட்டி (Time table) முறை கடைப் பிடிக்கப்பெற்றது. வீட்டு - வேலை (Home-work) என்ற ஒரு முறையையும் தம்பாடம் பயிற்றலில் நுழைத்தார். இதனால் மாணாக்கர்களிடம் சில கணக்குகளை வீட்டில் செய்தல், சில-எழுத்துப் பயிற்சிகளை வீட்டிலும் செய்தல் போன்ற நற்பழக்கங்களை ஏற்படுத்தினார். கரும்பலகையின் பயன்: கரும்பலகையை நன்கு பயன் படுத்துவார். வட்டிக் கணக்கு, இலாப-நஷ்டக் கணக்கு, காலமும் வேலையும், காலமும், தூரமும், கூட்டுவாணிகம், பின்னம், தசம பின்னம், போன்ற கணக்குகளைக் கரும் பலகையில் செய்து காட்டுவார். கணக்குகளைச் செய்யும் போது படிப்படியாக வழிமுறைகளைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பார். கல்விபயிற்றலில் கரும்பலகையைப்போல் கவனத்தை ஈர்க்கும் சாதனம் வேறொன்று இல்லை. அப்படிப் பிறசாதனங்கள் இருந்தாலும் இதனைப்போல் அடிக்கடிப் பயன்படுத்தக் கூடிய வேறு சாதனங்கள் இல்லை. வி. கே. அரங்கநாத அய்யர் இதனை நன்கு பயன்படுத்திக் கற்பித்ததால் எங்கள் மனத்தில கணக்கு செ தலில் தெளி வான அறிவு ஏற்பட்டது. கொடுக்கப்பெற்ற விட்டு வேலை கள் சரியாகச் செய்யப்பெற்றனவா என்பதைத் தணிக்கை செய்யும் பழக்கத்தைச் சோராது கடைப்பிடித்ததால் மாணாக்கர் கல்வியில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது இவர் சதகங்கள், புராணங்கள், அந்தாதிகள், நீதிநூல்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை. பாடநூல்களில் வரும் இப்பகுதிகளில் மட்டிலும் கவனம் செலுத்துவார். இக்காலக் கல்விமுறைகளை நன்குக் கடைப்பிடித்துக் கற்பித்ததால்