பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132: நினைவுக் குமிழிகள் மாணாக்கர்களிடல் புவியியல், வரலாறு, அறிவியல் போன்ற பாடங்களிலும் நல்ல அறிவு ஏற்பட்டது. இதனால் உயர் நிலைப் பள்ளி கல்விக்கு நல்ல அடிப்படை ஏற்பட்டது என்று சொல்லலாம். கணக்கு போடுவதில் முன்னணியில் நின்றேன். கல்லூரி வாழ்வு முழுவதிலும் கணிதமும் அறிவியலும் இரண்டு கண்கள் போல் அமைந்தன. வி. கே. அரங்கநாதய்யர் கற்பிக்க வேண்டியவற்றை யெல்லாம் கற்பித்துவிட்டார். நான் எட்டாம் வகுப்பில் சேர்வதற்குத் தகுதி பெற்று விட்டேன் என்றும் சொல்லி விட்டார். வெளியூர்ப் படிப்புக்குத் தடையாக இருந்த என் பாட்டியாரின் அன்புள்ளமும் இப்போது இல்லை; என் பாட்டி யாரின் மறைவுடன் இதுவும் மறைந்தது. உயர்நிலைப் பள்ளி யில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று என் அன்னையார் துடித்தார்கள், ஒன்றுவிட்ட என் அண்ணார் மகன் கணபதியும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் துணை யாக இருக்கும் என்று என் அன்னையார் நினைத்தார்கள். என் அண்ணார் தன் மகன் உயர்கல்வியைப் பற்றிக் கருத்தின்றி யிருந்தார். எதற்கும் காலம்’ வரவேண்டுமல்லவா? நான் பள்ளிக்கு வாளா போய்க்கொண்டிருந்தேன். என்னைக் கொண்டு பலமானாக்கர்கட்கு கற்பிக்கச் செய்தார் ஆசிரியர். இதனாலும் நான் கற்றவரையிலும் தெளிவு பெற்றேன். அப்போது நினைந்து பார்க்கும் ஆற்றல் இல்லாதவனாயினும் இன்று இத்தெளிவின் காரணத்தைக் கூறும் நன்னூலின் நூற்பாக்களை நினைந்து அசை போடுகின்றேன். நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநணி இகக்கும்.