பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்வி முன்னேற்றத்தில் எழுஞாயிறு 133 ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலிற் பிழைபா டிலனே. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். ஆசான் உரைத்த தமைவரக் கொளினும் காற்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.'" இவற்றுள். இறுதியில் குறிப்பிட்ட நூற்பாவின் கருத்து எனக்கு மிகவும் பொருந்துகின்றது. மாணாக்கர்க்குச் சொல்லிக் கொடுக்கும் போது தெளிவு ஏற்பட்டுவிடுகின்றது. எனினும், நான் மேலும் கற்றலில் ஒரு நோக்கம் ஏற்பட்டு விட்டது. வெளியூருக்குப் பயில்வதற்குப் போகமுடிய வில்லையே என்ற ஏக்கமும், என் படிப்பில் முன்னேற்றம் தடைப் பட்டதே என்ற கவலைபும் என்னைச் சூழ்ந்தன. பள்ளியில் ஆசிரியர் இட்ட பணிகளைச் செய்து முடித்தபின் பள்ளிக்கருகிலுள்ள பசனை மடத்துக்குச் செல்வேன். அது எப்போதும் திறந்தே இருக்கும். வெளியில் பாரதம், இராமாயணம், பக்தவிஜயம் என்ற மூன்று நூல்கள் பலகை களாலான கவட்டைகளில் அடையாளம் இட்டபடி திறந்த நிலையில் காட்சியளிக்கும். பெரியவர்கள் வந்து அவற்றைப் படித்துப் போவர். நான் இந்த மூன்று பெரிய நூல்களையும் ஓராண்டுக்குள் படித்து முடித்தேன். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', வடுவூர் துரைசாமி அய்யங்காரின் சில புதினங்கள், ரங்கராஜு எழுதிய புதினங்கள் சில ஆகிய வற்றையெல்லாம் படித்து முடித்தேன். உரைநடையில் எது கிடைத்தாலும் வேகமாகப் படித்து முடிக்கும் பயிற்சி கைவரப் பெற்றுவிட்டது. 40. நன்னூல் - 41, 42, 43, 44, 45,