பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நினைவுக் குமிழிகள்-1 பெரியார் வழிபாடு : மடத்தில் இரண்டு சமாதிகள் உள்ளன. தனித்தனியான கட்டடம் அவற்றிற்கு உண்டு. அவற்றில் சிவலிங்கப் பிரதிட்டை செய்யப் பெற்றிருந்தது. பெருமாளய்யா எங்கட்குச் சில பணிகளை இட்டார். காலையில் இரண்டு சமாதிகளையும் துப்புரவு செய்ய வேண்டும். இலிங்கத்தை நீராட்ட வேண்டும். மடத்திற்குள் ளேயே ஒரு சிறு நந்தவனம் இருக்கின்றது. மரமல்லிகை, அலரிமலர், வில்வம் அங்குக் கிடைக்கும். இவற்றைக் கூடை களில் சேகரிக்க வேண்டும். நானும் என் தம்பி கணபதியும் இந்தப் பணிகளையெல்லாம் அன்புடன் செய்தோம். பிறகு சமாதிக்கு விளக்கேற்றி மணியடித்துத் தூப தீபங்கள் காட்ட வேண்டும். இன்றுவரை நான் நல்ல நிலையிலிருப்பதற்கு சமாதியில் அடங்கிய பெரியவர்களின் ஆசி என்றே கருது கின்றேன். பெருமாளய்யா இந்த வைதிகக் காரியங்களை எங்களிடம் ஒப்படைத்து விட்டு மடத்துச் சொத்துகளைப் பராமரிக்கும் இலெளகிகக் காரியங்களில் ஈடுபட்டு விடுவார். பெருமாளய்யா ஒரு மாணி; வெள்ளாடை புனைபவர்; காவி வாங்கிக் கொள்ளவில்லை. நாங்கள் அன்புடனும் உகப்புடனும் காரியங்களைச் செய்து வருவதைக் கண்டு உள்ளம் பூரிப்பார்; தட்டிக் கொடுத்து ஆசி கூறுவார். கண்பர்கள் : துறையூர் சின்ன மடத்தில் தங்கியிருந்த போது அந்த மடத்தருகில் குடியிருந்தவர்களுள் இரண்டு பேர் நண்பர்களானார்கள். ஒருவர் வேணுகோபால் என்ற உடையார். இவர் எங்களை விடப் பெரியவர். மகா சாது. கள்ளங்கபடமற்றவர். அவருக்குத் தெரிந்த அளவு சில உலக விவகாரங்களைச் சொல்வார். மடத்துப் பெருமாளய்யாவைப் பற்றி விமர்சிப்பார்: பெருமையாகத்தான் பேசுவார். இவரிடம் சில விவேக சிந்தாமணிப் பாடல்களைச் சொல்வேன்; இவர் நுணுகிக் கேட்டு மகிழ்வார். இவரிடம் சொன்ன பாடல்கள் ஒன்றிரண்டை நினைவு கூர்கின்றேன்.