பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்ன மடத்தில் புகலிடம் 169 துறையூரின் வடபுறத்தில் தெப்பகுளத்துக்கு அருகில் கீழ்த் திசையில் இருக்கும் சின்ன மடத்தில்தான் தங்கு வதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பெற்றது. மடத்திலிருந்த திரு. பெருமாள் அய்யா என்பவர் எங்கட்கு நல்ல வசதிகள் செய்து தந்தார். நூல்கள் வைத்துக் கொள்வதற்கு ஒர் அலமாரி தந்தார். பாதுகாப்பாக நூல்களை அதில் வைத்துப் பூட்டிக் கொள்ளலாம். பெரிய கட்டடம்; சிறிய பல அறை களைத் தவிர பெரிய மண்டபம் (Hall) இருந்தது. மழைக் காலத்தில் இந்த மண்டபத்தில் படுத்துக் கொள்ளலாம். வெயில் காலத்தில் மாடியில் தங்கலாம்; மொட்டை மாடி தான். நல்ல காற்றோட்ட வசதி. அமைதியாகப் படிப்பதற்கு நல்ல இடமாக அமைந்தது இறைவன் திருவருள் என்பதை இப்போது நினைந்து பார்க்க முடிகின்றது. மடத்துக்கருகில் பெரிய ஏரி ஒன்று உண்டு. அக்காலத்தில் ஆறுமாதம் அதில் நீர் இருக்கும். ஏரிக் கரையின் வெளிப் புறமும், கடைவழிந்து செல்லும் ஒடையும் தான் கழிப்பிடங்கள் போல் பயன் பட்டன. ஊரின் வடபகுதியிலிருப்பவர்கள் இவற்றைப் பயன்படுத்தினர். தென் பகுதியிலிருப்பவர்கட்குச் சின்ன ஏரி காலைக் கடன் கழிக்க உதவியது. மேற்கு கிழக்குப் பகுதியி லிருப்பவர்கள் புன்செய் விளை நிலத்தை இவற்றிற்குப் பயன் படுத்தினர். அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சுமார் அரை ஃபர்லாங் தொலைவில் ஏரிக்கரை யருகிலிருக்கும் கிணற்றில்தான் பெரும்பாலான மக்கள் நீராடுவார்கள். கடைத்தெருவில் பணியாற்றுபவர்கள் வருவதற்கு முன் நாங்கள் நீராடித் துணிகளைத் துவைத்து முடித்து விடுவோம். துறையூரிலிருந்த வரையில் சனிக்கிழமை நடைபெறும் எண்ணெய்க் குளியல் கைவிடப்பெற்றது. அதற்குச் சரியான வசதிகள் இல்லை. காலை ஏழுமணக்குள் இந்த வேலை முடிந்து விடும்.