பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நினைவுக் குமிழிகள்-1 விருக்கின்றாள். நான் துறையூரில் பணியாற்றிய போது ஒரு முறை ஆலத்துடையாம் பட்டி செல்லுங்கால் இவள் வீடு சென்று காஃபி அருந்தியதாக நினைவு. அதன் பிறகு முப்பத் தைந்து ஆண்டுகளாக இவளைச் சந்திக்கவே இல்லை. குமிழி-22 22. சின்ன மடத்தில் புகலிடம் துறையூரில் எங்களைக் கண்காணிப்பதற்கு முத்தோர் கள் ஒருவரும் இலர். கல்லிப் பாளையம் ரெட்டியார் ஒட்டல் என்ற ஒர் உணவு விடுதி அந்தக் காலத்தில் புகழ் பெற். றிருந்தது. இங்குச் சிற்றுண்டி இல்லை. சாப்பாடு மட்டிலும் தான் உண்டு. ஒரு சிறிய கூரைக் கட்டடத்தில் இந்த உணவு விடுதி இருந்தது. கூரைக்கட்டடத்தின் வெளியில் மூன்றடி அகலமுள்ள மண்திண்ணை இருந்தது. மூங்கில் தட்டியால் மறைக்கப் பெற்றிருந்த திண்ணையில்தான் உள்ளே உண்பவர்கள் போக ஏனையோர் காத்திருக்க வேண்டும். உள்ளேயும் ஒரு பெஞ்சு இருந்தது. அதில் பெரியவர்கள் உட்கார்ந்து காத்திருப்பர். ஒரு சாப்பாடு அக்காலத்தில் 2: அனா, 3 அணாவுக்குக் கிடைத்தது. (15 காசு; 18 காசு) மாதத் தவணையில் சாப்பிடும் எங்கட்கு மாதம் ஆறு ரூபாய்க்குச் சாப்பாட்டு போட்டார்கள். காலையில் பழையது தான். நீரிலிருந்து சோற்றைப் பிழிந்து வைத்து முதல்நாள் மிஞ்சிய குழம்பு, ரசம் விடுவார்கள்; தேவைப்பட்டால் மோரும் தருவார்கள். பகல் 12 மணி, இரவு 7; மணிக்கு முழுச் சாப்பாடு உண்டு. இன்றைய நிலையுடன் அந்நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மலிவாகத் தோன்றும். ஆனால் அன்றைய பொருளாதார நிலையில் நாட்டுப் புறத்திலிருந்து வந்த எங்கட்கு அது கிராக்கியாகத்தான் இருந்தது.