பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்கல்விக்கு விடிவெள்ளி 167 நிற்பதில்லை. வழியில் ஒரு குட்டை முழங்கால் அளவுக்கு மேல் உள்ள தண்ணிரில் நடந்து குட்டையைக் கடந்தாக வேண்டும். மாட்டுவண்டியும் இந்தக் குட்டையில் நுழைந்து தான் வெளியில் வர வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை காலையில் ஐந்துமைல் நடை: ஞாயிற்றுக் கிழமை மாலையில் ஐந்து மைல் நடை. இப்படியாக அரையாண்டுத்தேர்வுவரை (டிசம்பர்) எங்கள் காலம் கழிந்தது. பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பெற்றது. அந்தக் காலத்தில் படிப்பில் வழி காட்டுவதற்கு வீட்டில் யாரும் இல்லை. தனிக்காட்டு ராஜா போல் நாங்கள் இட்டதுதான் சட்டம். இறைவன் அருள் இருந்ததனால், படிப்பில் எங்கட்கு அக்கறை இருந்தது படிப்பில் கண்ணுங்கருத்துமாக இருந்தோம். வீணடிக்கும் காலத்தைப் படிப்பில் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் முகிழ்க்கத் தொடங்கியது. துறையூரிலேயே தங்கிப்படித்தால் தான் காலம் பொன்னாகவும், கடமைகண்ணாகவும் அமையும் என்ற முடிவுக்கு வந்தோம். டிசம்பரில் அரை யாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பே துறையூருக்கு வந்து சேர்ந்தோம். சுரத்துளரிலிருந்து கோட்டத்துார் வரும் போது சில சமயம் என் மாமன் மகள் செல்ல பாப்பாவைக் கோட்டாத்துருக்குக் கூட்டிவருவதுண்டு. என் அன்னையாரும் இவள் அன்னை யாரும் இவளை எனக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று பேசிக்கொள்வதைக் கேட்டதுண்டு. இவளுடன் சிறு பிள்ளை போல் விளையாடி மகிழ்வேன். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு இருக்கும்; அவளுக்கு வயது எட்டு இருக்க லாம். திருமணப் பேச்சு எடுக்கும் போது எனக்கு எந்தவித மன வேறுபாடும் ஏற்படுவதில்லை. அவள்தான் நாணிக் கோணி தன் மன நிலையைக் காட்டுவாள். இவள் எனக்குத் திருமணமாகப் பேசப் பெற்ற மூன்றாவது செல்லபாப்பா. இவள் எரகுடியில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு நன்னிலையி