பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நினைவுக் குமிழிகள்-1 திட்டில்தான் செய்து முடிப்போம். சிறிது சிறிதாக படிப்பில் 'சூடுபிடித்தது"; மிக்க அக்கறையுடன் பயின்றோம். வகுப்பு ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்களில் படிப்பில் எங்கள் முன்னேற்றத்தைக் கண்டு மெச்சினார்கள். மூன்று மாதங் களில் வகுப்பில் இரண்டாவது மாணாக்கன் என்ற பெய ரெடுத்தேன். சாம்பமூர்த்தி என்ற தேவாங்கச் சிறுவன்தான் முதல் மாணாக்கனாகத் திகழ்ந்தான். உள்ளுர்ப்படிப்பு; வீட்டில் நல்ல வசதி. கீழிருந்து தொடர்ந்து முறையாகப் படித்து வந்ததால் அடிப்படை பலமாக இருந்தது. சின்னராசு, வாசுதேவன், வேங்கடாசலம் (பெயர் நினைவில்லை) இவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். சாம்ப முர்த்தியும் முத்துசாமியும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இவர்களும் நண்பர்களாயினர். எனக்கும் சாம்பமூர்த்திக்கும் படிப்பில் போட்டி இருந்து கொண்டே இருந்தது. நாங்கள் விரைவில் முன்னேறியதைக் கண்டு வகுப்பு மாணாக்கர்கள் அனை வருமே வியப்புற்றனர். ஊரை விட்டுப் படிப்பிற்காக வெளியூர் வந்ததும் எங்கள் பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. அதிகாலையில் ஐந்து, அவ்லது ஐந்தரை மணிக்குத் துயிலெழும் பழக்கமும், காலைக்கடன் கழிப்பதற்கு வெளியில் சென்று வருவதும், கருவேல் குச்சியைக் கொண்டு பல்துலக்கு வதும், காலையில் நீராடுவதுமான பழக்கங்கள் ஏற்பட்டன. கோட்டாத்துரிலிருந்த வரையில் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் நீராடுவோம்; நினைத்தபடி கிணற்றில் குதித்து நீந்து வோம். இந்தப் பழக்கங்கள் எல்லாம் குறைந்தன; குளிப்பதில் ஓர் ஒழுங்கு முறை ஏற்பட்டது. சுரத்துாரில் இருக்கும் போதே இந்த ஒழுங்கு முறை நடை முறைக்கு வந்து விட்டது. வாரவிடுமுறையில் சொந்தஊர் சுரத்துாரிலிருந்தபோது வாரந்தோறும் சனி, ஞாயிறில் கோட்டத்துரர் வந்து கொண் டிருந்தோம். மழைக்காலத்திலும் கூட எங்கள் பயணம்