பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்கல்விக்கு விடிவெள்ளி 165 உணவுக்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமே என்ற பிரச்சினை எழுந்தது. சுமார் ஒரு கல் தொலைவி லுள்ள சுரத்துனர் என்ற ஊரிலிருந்து தினமும் போய் வர முடிவு எடுக்கப் பெற்றது. கோ ட் டாத் தூ ரி லி ரு ந் து சுரத்துளரில் திருமணமாகி இருந்த நல்லம்மாள் வீட்டில் கணபதி உணவு கொள்ளவும், எனக்கு என்தாய் மாமன் வழியில் ஒன்று விட்ட மாமன் முறையில் உறவுள்ள தொலை யானத்தம் அம்மாள் வீட்டில் நான் உணவு கொள்ளவும் ஏற் பாடாயிற்று, அப்போது என் மாமன் இலங்கையில் ஏதோ வேலை பார்த்து வந்தார். தொலையானத்தம்மாள் மட்டிலும் மூன்று பெண் மகவுகளை வைத்துக் கொண்டு கஷ்டமாகக் காலம் கழித்து வந்தார். தொலையானத்தம்மாளும், நல்லம் மாளும் தினந்தோறும் காலையில் தயிர், மோர் எடுத்துச் சென்று துறையூரில் விற்று வந்தார்கள். வழக்கமாகச் சிலர் வீட்டில் தந்து வேலையை முடித்துக் கொள்வார்கள். இருவரும் தத்தம் வீட்டில் எங்கட்குக் காலையில் பழஞ்சோறு இட்டு கையில் கட்டமுது தந்து அனுப்பி விட்டுத் தாங்களும் தயிர் மோர் பாத்திரங்களைக் கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு எங்களுடன் கிளம்பிவிடுவார்கள், அரையாண்டுத் தேர்வு வரையில் சுரத்துாரில்தான் இருந் தோம். செப்டம்பர், அக்டோபரில் சரியான மழை. சோளக் காட்டின் குறுக்கே ஒட்டையடிப் பாதையில் களிமண்ணா லாகிய சேற்றில் சென்று வந்து கொண்டிருந்தோம். கையிலிருந்த மதிய உணவை-கட்டமுதை-அருகிலிருந்த தெப்பகுளத்துத்திட்டில் அமர்ந்து உட்கொள்வோம். மிகச் சிரமமாக இருந்தது. படிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. காலை நேரம் நடையில் கழிந்தது, மாலையில் திரும்பிய வுடன் சோர்வு எங்களை ஆட்கொள்ளும். இரவில் படிக்க முடியாமல் தூங்கிவிடுவோம். பள்ளியில் தரப்பெறும் வீட்டு வேலைகளை (Home - work) துறையூர்த் தெப்பகுளத்துத்