பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவுக் குமிழிகள்-1 எனக்கோ மிக வருத்தம். ஊருக்கு எப்படிப் போவது? * சிலர் கிண்டல் செய்வார்களே' என்ற கெளரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டேன். 'எங்காவது, எப்படி யாவது சேர்ந்து விட வேண்டும்.’’ என்று மனம் உறுத்திக் கொண்டிருந்தது. என்னுடைய துடிப்பை நன்கு அறிந்து கொண்டார் அரங்கநாத அய்யர். "ஏதாவது வழிகாண் போம்” என்று எங்கட்கு ஆறுதல் தெரிவித்தார். பேருந்து கிடைத்ததால் பகல் 2 மணிக்குள் துறையூர் வந்து விட்டோம். அந்தக் காலத்தில் ஒரே ஒரு பேருந்துதான் நான்குமுறை துறையூருக்கும் முசிறிக்குமாக ஓடிக் கொண்டிருந்தது சரியாக 2; மணிக்கு பெருநிலக்கிழவர் உயர்நிலைத் தொடக்க பள்ளிக்கு எங்களை இட்டுச் சென்றார் அரங்கநாத அய்யர். அப்போது அங்குத் தலைமையாசிரியாக இருந்தவர் E.B. நாக ரத்தினம் அய்யர் சிறந்த நிர்வாகி என்ற பேரும் புகழும் நிறைந்தவர். அவர் சேர்க்கும் பொறுப்பை A. இராமசாமி அய்யர் என்ற இரண்டாவது உதவி ஆசிரியரிடம் விட்டு விட்டார். இராமசாமி அய்யர் ஆங்கிலத்திலும் கணக்கிலும் வாய்மொழித்தேர்வுகள் வைத்தார். "ஏழாவது வகுப்பில் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம்: எட்டாவது வகுப்பில் சேர்த்தால் கஷ்டப்படுவார்கள்’ என்று சொல்லிவிட்டார். இராமசாமி அய்யர் மகா சாது; புன்முறுவலுடன் இனிமை யாகப் பேசுபவர். அரங்கநாத அய்யர் அவரை வற்புறுத்தி "எட்டாவது வகுப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்: அறிவுக் குறைவாக இருந்தாலும் சமாளிக்க ஏற்பாடு செய்வேன்' என்று உறுதியளித்து எட்டாவது வகுப்பில் எங்கள் இருவரை யும் சேர்த்துக் கொள்ள ஒப்பவைத்தார். நாங்கள் இருவரும் எட்டாவது வகுப்பில் சேர்ந்து விட்டோம். ஒன்றிரண்டு நாட்களில் பெட்டி படுக்கையுடன் வருவ தாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டார். வி.கே. அரங்க நாதய்யர். மிக்க மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினோம்.