பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்கல்விக்கு விடிவெள்ளி 163 தெலுங்கு பிராமணர். ஆயினும், இவர்தான் உண்மையில் (de facto) தலைமையாசிரியராகப் பணியாற்றினார். கே. இராமசந்திர அய்யர்தான் மாணாக்கர்களைச் சேர்த்தல் குற்றம் புரிகின்ற மாணாக்கர்களைச் சமாளித்தல் போன்ற செயல்களில் தலையிட்டுப் பள்ளியைச் சிறந்த பள்ளியாகத் திகழச் செய்வதில் பெரும்பங்கு கொண்டிருந்தார். நாங்கள் சேர்வதற்குச் சென்றிருந்த காலத்தில் பிள்ளை களைச் சேர்க்கும் பணி முற்றுப் பெற்றுப் பள்ளிப் பாடங்கள் வேகமாகக் கற்பிக்கப்பெற்று வந்தன. வி.கே. அரங்கநாத அய்யர் எங்களைத் தலைமையாசிரியர் அறைக்கு இட்டுச் சென்றபோது கே. இராமச்சந்திரய்யர் அங்கு அமர்ந்திருந் தார். இருவரும் ஏதோ நிர்வாகப் பிரச்சினைகளைப் பற்றி கலந்து ஆய்ந்து கொண்டிருந்தனர். 'ஆகஸ்டு கடைசியில் வருகின்றீர்கள்: ஜூலை 15 தேதியிலேயே மாணாக்கர்களைச் சேர்க்கும் வேலை முடிந்தது. அடுத்த ஆண்டில் ஜூன் 10 தேதிக்குள் வந்து விடுங்கள்’ என்று கே. இராமச்சந்திர அய்யரே முடிவு தெரிவித்து விட்டார். இடையில் என்னை நோக்கி, பையா, .1 ஐ 1 ஆல் பெருக்கினால் என்ன விடை?” என்று வினவினார். நான் ' .1” தான் என்றேன். உடனே இப்படித்தான் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அடிப் படை அறிவின்றி நேராக நான்காம் படிவத்தில் சேர்க்க வேண்டும் என்று வருகின்றார்கள். ஒரே கழுத்தறுப்பு’’’ என்று கிராமத்திலிருந்து மாணாக்கர்களைச் சேர்ப்பதற்கு வரும் ஆசிரியர்களைச் சலித்துக் கொண்டார். பிறகு 'அடுத்த ஆண்டு வாருங்கள்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். எனக்கோ .1 என்ற விடை சரிதானே என்று மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. வெளியில் வந்ததும், உன் விடை தவறு; .01 என்று சொல்லியிருக்க வேண்டும்” என்று விளக்கினார் வி.கே. அரங்கநாத அய்யர்.