பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நினைவுக் குமிழிகள் யநுபவத்தில் காட்ட இராமனுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. வசிட்டரிடமிருந்து பெறாத ஒரு சில அரிய விஞ்சைகளையும் விசுவாமித்திரரிடமிருந்து பெறுகின்றான் இராமன். இவ்வாறு பலவற்றைப் பெறப் போகின்றார்கள் இராமலக்குமணர்கள் என்பதை, பெய்யு மாரியால் பெருகு வெள்ளம்போல் மொய்கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல் ஐய! நின் மகற்கு அளவில் விஞ்சைவந்(து) எய்து காலம் இன்று எதிர்ந்ததாம்’ (பெருகும் - அதிகரிக்கும்; போய் - சென்று; வேலை - கடல்: முடுகும் - விரைந்து செல்லும்; ஆறுபோல - விதம் போல்; விஞ்சை - வித்தை; எதிர்ந்தது - நேர்ந்தது.) என்று வசிட்டன் தசரதனிடம் கூறுவதைக் காண்கின்றோம். இராமாயணத்தில் இராமலக்குமணர்களை விசுவாமித்திரரே வந்து கூட்டிச் செல்லுகின்றார். எங்கள் வாழ்வில் வசிட்டரே இராமலக்குமணர்களை விசுவாமித்திரரிடம் கூ ட் டி ச் செல்வதுபோல் எங்களை வி. கே. அரங்கநாத அய்யர் முசிறிக்கு இட்டுச் செல்லுகின்றார். தாயை இழந்த கணபதியை மகிழ்ச்சியுடன் தந்தை வாழ்த்தி அனுப்பி வைக் கின்றார்: தந்தையை இழந்த என்னை என் அன்னை மகிழ்ச்சியுடன் ஆசிகூறி அனுப்புகின்றார். நாங்கள் முசிறிக்குச் சென்ற போது உயர்நிலைப் பள்ளி முசிறிவட்ட அலுவலகத்திற்கு எதிரிலுள்ள அய்யம்பாளைய தனவந்தர் பிள்ளையொருவருக்குச் சொந்தமான கட்டடத் தில் இருந்தது. செல்லையா என்று அன்புடன் அழைக்கப் பெறும் அரங்கசாமி அய்யங்கார் அப்போது தலைமை யாசிரியர்: கே.ஆர்.' என்று எல்லோருக்கும் நன்கு தெரிந்த கே. இராமச்சந்திர அய்யர் முதல் உதவி ஆசிரியர். இவர் 1. பால, கையடை - 15