பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. துறையூரில்-உயர்நிலைத் தொடக்கப் பள்ளி வாழ்வில் குமிழி-21 21. உயர்கல்விக்கு விடிவெள்ளி 6T or வாழ்க்கையில் விடிவெள்ளி தோன்றத் தொடங் கியது. என் அண்ணாரும் தன் மகன் கணபதியை உயர் நிலைப்பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார். என் அன்னை யாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. என்னிடமும் புதியதோர் உற்சாகம் தோன்றியது. என்னையும் கணபதியையும், முசிறியிலிருந்த கழக உயர்நிலைப் பள்ளியில் (District Board Hish School) சேர்க்கும் பொறுப்பை எங்கள் ஆசிரியர் வி. கே. அரங்கநாத அய்யர் ஏற்றுக்கொண்டார். 1930 ஆகஸ்டு மாதத்தில் ஒருநாள் என்னையும் கணபதியையும் முசிறிக்கு இட்டுச் சென்றார். வசிட்டரிடம், கல்விகற்ற இராம லக்குமணர்களை விசுவாமித்திரர் தாம் செய்ய இருக்கும் வேள்விக்கு அசுரர்கள் குந்தகம் விளைவிக்காதிருக்கும்பொருட்டுக் காவலுக்காக இட்டுச் சென்றார் என்பதைக் கம்பராமாயணத்தால் அறிகின் றோம். பள்ளிப்பிள்ளையாக இருந்த இராமனின் வாழ்க்கை யில் ஈடுபட வாய்ப்பளிக்கின்றார் விசுவாமித்திரர். வசிட்ட ரிடம் ஏட்டுப்படிப்பாகப் பயின்றவற்றை வாழ்க்கை س-l lس--