பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நினைவுக் குமிழிகள் காக்கை வடிவ அட்டையையும் மற்றொன்றில் குருவி வடிவ அட்டையையும் பொருத்துவேன். டப்பைகளின் அடிப் பகுதிகளை இரண்டு ைக க ளா லு ம் அசைத்தால் காக்கையின் நிழலும் குருவியின் நிழலும் எதிர்நோக்கி நகரும். 'காக்கையும் குருவியும் சண்டையிடுகின்றதைப் பாருங்கள்’’ என்பேன். இப்படியே யானைமேல் மனிதனை யும், குதிரைமேல் மனிதனையும் கொண்ட அட்டைவடிவங் களைப் பொருத்தி அசைத்து யானை வீரனும் குதிரை வீரனும் போரிட்டுக் கொள்கின்றதைப் பாருங்கள்’’ என்பேன், திரைக்கு வெளியில் இருப்பவர்கள் இவற்றைக் கண்டு மகிழ்வார்கள். என் வகுப்புத் தோழர்களும் கீழ்வகுப்புகளில் படிக்கும் சிறுவர்களும் இந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு என்வீட்டில் வந்து கூடுவார்கள், என் அன்னையார் அக்கம்பக்கத்துப் பெண்களையும் பாட்டிமார்களையும் கூட்டிவந்து இந்த "ஊமைப் படக்காட்சிகளைக காணச் செய்வார்கள். 'தன் மகன் பெரிய படக்காட்சியின் இயக்குநர் என்ற பெருமித உணர்ச்சி அவர்களிடம் ஏற்படும். பாட்டிமார்களும் பெண்களும், 'காமு, உன் பையனின் மூளையே மூளை. இந்தச் சிறுவயதில் என்னென்னவோ செய்கின்றானே’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டு பிரிவார்கள்.