பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சிப் பருவங்கள் 159 இடக்கையில் மேற்பகுதி உடைந்து கூடும்போது சிறுத்து விட்டது. மரத்திலிருந்து வீழ்ந்த நிகழ்ச்சியைக் கேட்ட போதும் பின் அந்தப் பையனைப் பார்த்த போதும் பிறகு ஊனக்கையை அடிக்கடி பார்க்கும்போதும் நான் நாவல் மரத்தில் ஏறி ஊனமின்றி இறங்கி விட்டதை நினைத்துக் கொள்வேன்; மரத்திலிருந்தபோது ஏற்பட்ட திகிலும் எழும். பல்வேறு வகைகளில் படிப்பதற்குப் பணமின்றி உழலும் என்னை உடல் ஊனமின்றிக் காத்த, இன்றும் காத்து வருகின்ற, இறைவனின் கருணை உள்ளத்தை அடிக்கடி நினைத்துக் கொள்ளுகின்றேன். என் பிராரத்த கன்மமும் இவ்வாறு ஊனமுறும் நிலைக்கு என்னை உட்படுத்தாததும் இறைவனின் பெருங்கருணைத்திறமே என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்ளுவேன். பொம்மலாட்டம்-நிழலாட்டம் : கோட்டாத்துாரிலிருந்து “பொம்மலாட்டம்' என்ற ஒன்றை நானாக உருவாக்கிப் பலருக்குக் காட்டி மகிழ்வித்தது இப்போது நினைவிற்கு வருகின்றது. மெல்லிய அட்டையில் காக்கை, குருவி, கிளி, குதிரை, யானை, குதிரைமீது மனிதன், யானைமீது மனிதன்...என்றெல்லாம் படங்களை வரைந்து அப்படங்களை வெட்டி எடுப்பேன். இரண்டு மூங்கில் டப்பைகளை ஒர் ஆணி யால் நடுவில் பொருத்தி ஆங்கில எழுத்து x (எக்ஸ்) போல் ஆக்கிக் கொள்வேன். டப்பையின்மேற்பகுதிகள் இரண்டிலும் சிறிய பிளவுகளை உண்டாக்கி அவற்றில் இந்தப் படங்களைப் பொருத்துவேன். என் தாயாரின் கிழிந்த வெள்ளைச் சேலையைத் திரையாக அமைத்துக் கொள்வேன். திரையின் உட்புறத்தில் ஓர் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு டப்பைக் குச்சிகளின் பிளவுகளில் வெட்டி எடுத்த அட்டைப் படங்களைப் பொருத்தி அவற்றின் நிழல் திரையில் படுமாறு அமைப்பேன். திரைக்கு வெளியிலிருந்து பார்ப்பவர்கள் படங்களின் நிழலைக் காண்பார்கள். டப்பைப்பிளவொன்றில்