பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நினைவுக் குமிழிகள்-1 அமைந்திருந்தன, நடுப்பகுதியை நடு ஏரி என்றும், இறுதிப் பகுதியைச் சின்ன ஏரி என்றும் வழங்குவது ண்டு. இந்த ஏரிக் கரையில் வரிசையாக ஐந்தாறு நாவல் மரங்கள் இருந்தன. நடுத்தரமான மரங்கள் இவை. இந்த மரங்கள் ஒன்றில் ஏறி பழங்கள் பறித்துக் கொண்டிருந்தபோது காற்று பலமாக விசிற்று. ஆடிக்காற்றல்லவா? விழுந்தால் சால் கை ஒடிந்து விடும் என்பது உறுதி. மரத்தில் ஏற வேண்டாம்; உயரத் திலிருந்து கிணற்றில் குதிக்க வேண்டாம்...நீ எனக்கு ஒரே பிள்ளை, உனக்கு ஏதாவது நடந்தது என்றால் என் உயிர் இருக்காது' என்று அடிக்கடி என் அன்னையார் சொல்லி வந்ததை மரத்தின் மேல் இருக்கும்போது நினைத்துக் கொண்டேன். தாங்க முடியாத திகில் உண்டாயிற்று. உடலும் சிறிது நடுங்கத் தொடங்கியது. காற்றோ நிற்பதாகத் தெரியவில்லை. ‘எப்படியாவது இறங்கி விடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன். கம்பளிப்புழு அல்லது மர அட்டை நகர்வதுபோல் மரக்கிளையை வயிறு ஒட்டும் நிலையில் தழுவிக் கொண்டே பின்பக்கமாக மெதுவாக ஊர்ந்து ஒர் அரைமணி நேரத்தில் இறங்கி விட்டேன். போன உயிர் திரும்பி வந்தது போன்ற நிலை. ‘இனி மரத்தில் ஏறுவ தில்லை என்ற உறுதி எடுத்துக் கொண்டேன். 1937-39 ஆண்டுகளில், நான் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது விடுமுறையில் பொட்டணத்தில் (நாமக்கல் தாலுக்காவில் ஒரு சிற்றுார்) என் மாமனார் வீட்டில் தங்குவதுண்டு. உண்டநேரம் போக அரட்டைக் கச்சேரி நடக்கும். 'மணியக்காரர் வீட்டுத் திண்ணை' என்று வழங்கும் ஒன்றுவிட்ட என் அண்ணார். வீட்டுத் திண்ணையில் பொழுது போக்குவதுண்டுத அப்பொழுது அந்த ஊரில் சடை ரெட்டியார் வீட்டு மூத். மகன் நெல்லி மரத்தில் ஏறிக் கையை ஒடித்துக் கொண்டான் இரண்டு மாதம் கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.