பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சிப் பருவங்கள் 157 இந்தப் பருவத்தில் (8-12 வயது) நாங்கள் நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு இலந்தைப் பழம் சேகரிப்பதற்கு ஒரு கல் தொலைவிலுள் முட்புதர்களும் முள் மரங்களும் மண்டிக் கிடக்கும் அடவிக்குச் செல்வோம். இலந்தைப் பழங்களைச் சேகரித்து வருவோம். அதிகமான பழங்களைச் சேகரித்து வரும்போது அவற்றிலுள்ள கொட்டைகளை நீக்கி விட்டு உப்பையும் சிறிய அளவு மிளகாய்ப் பொடியையும் சேர்த்து சிறுசிறு வடைகளைத் தயாரித்து வெயிலில் உணர்த்துவார் என் அன்னையார். கோடைக்காலத்தில் இவ்வடையில் ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கதுப்பில் அடக்கி வைத்துக் கொண்டால் தாகவிடாய் தீரும்; அஃது எழாமலும் இருக்கும், இன்னொரு பழக்கமும் என்னிடம் அப்பொழுது இருந்தது. பன்னிறப் பொன்வண்டுகளைப் பிடித்து வந்து காலித் தீப்பெட்டியில் வைத்துப் போற்றுவேன். சிவப்பு நிறம், சிவப்புப் புள்ளிகள் மின்னும் நிறம், பச்சை நிறம், பச்சைப் புள்ளிகள் மின்னும் நிறம் இவ்வாறு பல நிறங்கள் கொண்ட வண்டுகளைத் தீப்பெட்டிகளில் அடைத்து வைத்துப் போற்றுவேன். அவற்றிற்கு 型。称砂”Q#仔”芯 அவை இருந்த செடிகளின் தழைக்கொழுந்துகளையே தீப்பெட்டியில் போட்டுப் பாதுகாப்பேன். ஒரு சமயத்தில் பத்துப் பன்னிரண்டு பன்னிற வண்டுகள் என்னிடம் இருந்ததைப் பலர் கண்டு மகிழ்ந்ததுண்டு. ஆடி மாதத்தில் நாவற்பழம் மலிந்திருக்கும். இதைச் சேகரிப்பதற்கும் குழுக்களாகச் செல்வோம். இருப்புச் சக்கரங்களை உருட்டிக் கொண்டே எங்கும் செல்லும் பழக்கம் எங்களிடம் இருந்தது. ஏதோ வாகனங்களில் சென்று வருவது போன்ற பாவனை (Make believe). கோட்டாத் தூரில் இருக்கும் ஏரி ஒன்றைக் குறிப்பிட்டேன் அல்லவா? இந்த ஏரியில் மூன்று பகுதிகள் இருந்தன. இப்பகுதிகளில் நடுப்பகுதியும் இறுதிப்பகுதியும் ஏரிக்குத் தென்புறமாக