பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நினைவுக் குமிழிகள்-1 கின்றன. இவற்றையெல்லாம் எண்ணும்போது நான் இக் காலத்தில் சிறுவன்ாக இருந்து படிக்க வாய்ப்பு இருக்கக் கூடாதா?’ என்ற சபலமும் அடிக்கடி மனத்தில் எழுகின்றது. இந்த வயது உயர்நிலைப் பள்ளிகளில் கீழ்ப்படிவங்களில் படிக்க வேண்டிய காலம். அந்த வாய்ப்பு கைவரப் பெறாமல் சிற்றுாரில் காலம் கழிக்க வேண்டி வந்ததே என்ற கழிவிரக்கம் இப்போது எழுகின்றது. இப்பருவத்துச் சிறுவர்களைப் பற்றி (8.12. வயது) உளவியலார் கூறுவதை நினைந்து பார்க்கின்றேன். "இப்பருவத்தில் சிறுவர்கள் பிற பிள்ளைகளுடன் கூடிக்குலாவுவதில் ஆர்வங்காட்டுகின்றனர். இப்பொழுது சிறுவன் தன்னந்தனியனாக விளையாட விரும்புவ தில்லை; பிற சிறார்களுடன் சேர்ந்தே விளையாடு கின்றான்: பலருடன் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து விடுகின்றான். பெரும்பாலும் ஒரே பாலைச் சார்ந்த சிறுவர்களே இக்குழுக்கள் அமைத்துக் கொள்ளு கின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவன் ஒருவனே இருப்பான்; பெரும்பாலும் தற்சாதிப்பும் உடல் வன்மையும் மிச்குள்ளவன் தலைவனாக அமைவான் .. * 卷 ● 曝 曲 * இப்பொழுதுதான் குழந்தைகள் வெளியுலகைப் பற்றித் தெரிந்து கொள்ள விழைகின்றனர். வெளிச் சிறார்களுடன் கூடி விளையாடுவதால் சிறுவர்களிடம் சமூக சம்பந்தமான சில பண்புகள் அமைகின்றன. தலைவனுக்கு கீழ்ப்படிதல், குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரனாதல் போன்ற குணங்கள் அவர்களிடம் வளர் gair par. * * * * இக்குணங்களெல்லாம் அப்பொழுது அமைந்திருந்தனவா என்று இப்பொழுது நினைந்து பார்க்கின்றேன். 44. கல்வி உளவியல்-பக் 107-108