பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சிப் பருவங்கள் 155 வெள்ளைக்காரன்' வேடத்தையும் போட்டுக் கொண்டதாக நினைவு. மாமன் முறையிலுள்ளவர்களெல்லாம் நான் போட்டுக் கொண்ட வெட்டியான்' வேடத்தைக் கேலி செய்தனர். 'உன் தந்தையார் கொம்பு ஊதிக் கொம்பு காத்தான்’ என்ற பெயர் பெற்றார். அந்தப் பட்டப்பெயர் உனக்கும் இறங்கிவிட்டது இப்போது ‘வெட்டியான்' வேடத்தைப் போட்டுக் கொண்டு பறையன்' ஆகிவிட்டாய். உங்கள் வமிசமே தீண்டத்தகாதார் மீது ஈடுபாடு கொண்டது போலும்!’ என்று நையாண்டி செய்ததை இப்போது நினைவுகூர முடிகின்றது. எஸ் நோ என்ற இரண்டு சொற் களைக் கொண்டே வெள்ளைக்காரன் வேடத்திற்குப் பொலிவு தந்தேன். அப்பொழுதுதான் ஆங்கிலம் பயின்று கொண்டிருந்தேன். என் நண்பன் கி. இராசகோபாலன் சற்று அழகானவன்; ஆகையால் அவனுக்குப் பொருத்தமான பெண் வேடம் போட்டுக் கொண்டான். வேறு சிலர் என்னென்னவோ வேடங்களைப் கொண்டனர். அவையெல்லாம் இப்போது நினைவுக்கு வரவில்லை. இந்தப் பருவத்தினரின் சிறப்பியல்பாகப் படிப்பில் ஆர்வங்காட்டுதலை எடுக் துக் காட்டுவர் உளவியலார். எத்தனை நூல்களைக் கொடுத்தாலும் அவற்றை விரைவில் படித்து முடித்த விடுவர்.' சிற்றுார்களில் அக்காலத்தில் நூலகம் இல்லை, உரைநடை நூல்கள் கிடைப்பது அரிய தாகவே இருந்தது. தாய்மொழிக்குச் சிறிதளவு ஏற்றம் கொடுத்திருப்பதால் இப்பொழுது பல்வேறு துறைகளில் நல்ல நல்ல உரைநடை நூல்கள் வெளிவருகின்றன. இவற்றைப் பெற்றோர்கள் வாங்கும் நிலையில் இல்லா திருந்த போதிலும் நூலகங்களிலாவது இப்போது கிடைக்கும். இவற்றைத் தவிர வார பிறை, திங்கள் இதழ்கள் கிடைக் 43. கல்வி உளவியல் - பக். 108