பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நினைவுக் குமிழிகள்-1 கிருஷ்ணமூர்த்தி கோட்டாத்துTரில் இருந்து இசை பயிற்றிய காலத்தில் மார்கழி மாதம் அதிகாலையில் பசனைக் குழு ஒன்று பசனை மடத்திலிருந்து கிளம்பி ஊரை வலம் வரும் இவ்வாறு வலம் வருதல் காலை ஆறு மணிக்குள் நிறைவு பெறும். நான் ஊரிலிருந்த பொழுது இந்தப் பசனைக் குழுவில் கலந்து கொள்வதுண்டு. பசனைக்குழு பசனை மடத்திற்கு மீண்டதும் கண்ணனுக்குக் கற்கண்டு கலந்த வெண்ணெய், பஞ்சாமிர்தம், சுண்டல் இவை நைவேத்தியம் ஆகும். இவற்றை பசனைக் குழுவினருக்கும் குழுமியிருக்கும் சிறுவர் கட்கும் பகிர்ந்து வழங்குவார்கள். கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்ற குணம் நல்லப்பரெட்டியார், சிதம்பரம், சின்னத்தம்பு என்கின்ற நல்லப்ப ரெட்டியார் என்ற மூவரும் சில பெரியோர் களால் தூண்டப் பெற்று இந்தப் பசனைக் குழுவில் கலந்து கொள்ளும்போது இந்தப் பசனைக் குழுவிற்கு ஒரு புதிய களை ஏற்பட்டது. ஊர்வலத்தில் வந்த கூட்டமும் பெருகிற்று. ஊருக்கும் ஒரு பெரிய புகழ் ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் இந்த உற்சாகம் மங்கியது. இப்போது ஊரில் எந்தவித சிறப்பான நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை; விரிச் சென்று கிடக்கின்றது. திருவிழாக்கள் அரியனவாக உள்ள எங்கள் ஊரில் ஒரு முறை ஊரணை கொண்டாடப்பெற்றது. என் தாயார் அந்த ஆண்டுதான் தம் சொந்தச் செலவில் பஞ்ச உலோகங் களாலான மாரியம்மன் திருமேனியைத் தயாரித்துக் கோயிலில் வைத்தார்கள். மாரியம்மன், பிடாரிக் கோயில்களில் ஊர் மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஒரு வாரம் ஊர் விழாக் கோலம் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு தெய்வத் திருமேனி மாலையிலோ, காலையிலோ ஊர்வலம் வந்தவண்ணம் இருந்தது. சிறுவர்கள் பல்வேறு வேடங்களைப் போட்டுக் கொண்டு ஊர்வலம் வந்தனர். ஒருநாள் பகலில் ‘வெட்டியான் வ்ேடத்தையும் மற்றொரு நாள் இரவில்