பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சிப் பருவங்கள் 153 வளர்த்துப் போற்றத் தொடங்கினர். பெரகம்பியிலிருந்த முடிவளர்க்கும் நாகரிகம் கோட்டாத்துாரிலும் நன்கு பரவி விட்டது. என்னை விடச் சற்று மூத்தவர்களிடமும் இந்த நாகரிகம் பற்றிக் கொண்டதைக் கண்டேன். அவர்கள் சிட்டுக் குடுமி விட்டுக் கொண்டை போட்டுக்கொள்ளத்தொடங்கினர். இந்த நிலையில் ஊரிலுள்ள செல்வர்கள் வீட்டு இளைஞர்களில் சிலர் இசைப்பயிற்சி பெற விழைந்து எங்கிருந்தோ வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ஓர் இசை யாசிரியரைக் கொண்டு இசையில் பயிற்சி பெற்றனர். ஐந்தாறு பேர்கட்குமேல் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர வில்லை. இவர்கள் கூட்டாசச் சேர்ந்து ஐம்பது ரூபாய் மாதச் சம்பளமாகச் சேர்த்துத் தந்ததாக நினைவு. என் இல்லத்தருகில் கிருஷ்ண மூர்த்தியும் அவர் தம்பியும் ஒரு வீட்டில் தங்கியிருந்ததால் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சமயத்தில் வடுவூ துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியா, ரங்கராஜ" இவர்கள் எழுதிய புதினங்கள் சிலவற்றைப் படித்த முடித்தேன். இப்போது என்ன புதினங்கள் படித்தேன் என்று நினைவுக்கு வரவில்லை. இந்தச் சமயத்தில் புதினங்களில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு கிருஷ்ணமூர்த்தி தான் எழுதி வைத்திருந்த புதினத்தின் கைப்படியைத் தந்தார். அது மிக நன்றாக இருந்ததாக நினைவு. பின்னர் அஃது அச்சேறிற்றா என்பதை அறியக் கூடவில்லை. நானும் மேற் படிப்பின் நிமித்தம் வெளியூர் சென்று விட்டேன். துறையூரில் படித்த காலத்திலும் முசிறியில் முதல் ஆண்டு படித்த காலத்திலும் கிருஷ்ணமூர்த்தி கோட்டாத்துாரில்தான் இருந்தார். பின்னர் எங்கு சென்றார் என்பதை என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை. அதில் முயற்சியும் எடுக்க வில்லை,