பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நினைவுக் குமிழிகள்-1 ஆண்டில் ஒரிரு தடவைகள் பெரகம்பி சென்று வருவேன்; அங்குள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. நான் அங்குப் போனபோது கிருஷ்ண மூர்த்தி என்ற ஆங்கில ஆசிரியர் நியமிக்கப் பெற்று என் நண்பர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருந்ததைக் கண்டேன். என் நண்பர்களில் கீச்சி ரெட்டியார் வீட்டுக் கிருஷ்ணசாமி, கோட்டாத்துர் நாராயணன் என்ற இருவரின் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டேன். இலிங்கி செட்டியார் தமக்கே உரிய முறையில் சிறுபிள்ள்ைகட்குப் பாடம் பயிற்றிக் கொண்டிருந்தார். ஆனால் நான் படித்தபோது அவருக் கிருந்த உற்சாகம் காணப் பெறவில்லை. இதற்குத் துணைவி யாரை இழந்தது, குடும்பப் பொருளாதார நிலை, தம் மக்கள் சரியாகப் படிக்காமை இவை காரணங்களாக இருக்கலாம், என் நண்பர்களின் முன்னேற்றம் என்னுடைய முன்னேற்றத்தை விட விஞ்சியிருப்பதையும் கண்டேன். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. ஊருக்குத் திரும்பியதும் மிக ஆர்வத்துடன் கற்றேன். அரங்கநாத அய்யரும் என் புதிய ஊக்கத்தைக் கண்டு மகிழ்ந்து நன்றாகத் கற்பித்தார். என்னுடைய முன்னேற்றத்தில் ஒரு வேகமான மாற்றமும் காணப்பட்டதை நானே உணர்ந்தேன். விரைவில் படிப்பில் ஒரு தேக்கமும் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில்தான் பசனை மடத்திலிருந்த இராமாயணம், பாரதம், பக்தவிஜயம் என்ற பெரிய உரைநடை நூல்களைப் படித்து முடித்தேன். பெரகம்பிக்குச் சென்றபொழுது என்னைவிடச் சற்று மூத்தவர்களில் பலர் தலைமுடியை நன்கு வளர்த்து அழகான கொண்டை போட்டுக் கொண்டிருந்தனர். என்னோ டொத்தவர்களும் அவ்வித ஆசை கொண்டிருந்தனர். என்னிடமும் அத்தகைய ஆசை எழுந்தது. நானும் முடி வளர்த்துப் போற்றத் தொடங்கினேன். என்னைப் பார்த்து இ. இராசகோபால், ராமுடு, இராசமாணிக்கம் முதலியோர்