பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சிப் பருவங்கள் 151 குழவிப்பருவம் : 0.2; அல்லது 3வயது முன்பிள்ளைப்பருவம் 3; அல்லது 7வயது; மனவளர்ச்சிக் குரியது. நிலைமாறு பருவம் 6 அல்லது 7-8 வயது; உடல் வளர்ச்சிக் குரியது. பின்பிள்ளைப்பருவம் 8.12 வயது; மனவளர்ச்சிக்குரியது: முன்குமரப்பருவம் 12-14வயது; உடல் வளர்ச்சிக்குரியது. பின்குமரப்பருவம் 14.18வயது மனவளர்ச்சிக்குரியது இவற்றுள் சில சமயம் நிலைமாறு பருவத்தை நடுப் பிள்ளைப்பருவம் எனவும் குறிப்பிடுவதுண்டு. இங்ங்னம் குழந்தையின் வளர்ச்சியைப் பலபடிகளாகப் பிரித்தாலும் வளர்ச்சி ஆங்காங்கு ஒவ்வொரு படியிலும் முடி வெய்திப் பின்பு புதிதாகத் தொடங்குகின்றது என்று கருதுதல் தவறு; அஃது ஒரே தொடர்ச்சியாகவே போகின்றது. ஒரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் பிற பருவங்களில் காணப்பெறா என்றோ, ஒவ்வொரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் முழுவதும் மறைந்த பிறகு தான் அதற்கடுத்த பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் தோன்றும் என்றோ கருதுதல் வேண்டா. மேலும், ஒவ்வொரு பருவத்திற்குரிய வயது எல்லையையும் மறைமொழியாகக் கொள்ள வேண்டியதும் இல்லை, இவை யாவும் குழந்தைக்குக் குழந்தை மாறக்கூடியவை; இவை யாவும் குழந்தைகளின் குடிவழியையும் அவை வளர்ந்து வரும் சூழ்நிலையையும் பொறுத்தேயிருக்கும் என்பது உளவியலாரின் முடிவுமாகும். இப்போது பின் பிள்ளைப்பருவத்திலிருக்கின்றேன். பல் வரிசைகள் திருந்துகின்றன. வளர்ச்சியில் வேகம் குறை கின்றது. குளித்தல், தலை வாருதல் போன்ற உடல்தேவை களுக்கு அதிகக் கவனம் தந்தது நினைவிற்கு வருகின்றது.