பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நினைவுக் குமிழிகள்-1 டெரகம்பி, கோட்டாத்துார் வாழ்க்கையில் காலையில் நீராடும் பழக்கமே இல்லை. யாரோ ஒரு சில பெரியவர்கள் நியமநிட்டை அநுட்டிப்பவர்கள் காலையில் நீராடுவதைப் பார்த்திருக்கின்றேன். அமாவாசை, புரட்டாசி சனி, ஏகாதசி, கிருத்திகை போன்ற நன்னாட்களில்தான் காலை யில் நீராடும் பழக்கம் உண்டு. ஏனைய நாட்களில் பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் தான் கிணற்றில் நீராடும் பழக்கம் பெரும்பாலோரிடம் இருந்தது. குமிழி-20 20. வளர்ச்சிப் பருவங்கள் கோட்டாத்தூரில் வாழ்ந்தபோது சில பயனுள்ள பொழுது போக்குச் செயல் சளில் ஈடுபட்டதுண்டு. அந்த ஊர் பள்ளிப் படிப்பில் ஒரு தெவிட்டுநிலை (Saturation point) ஏற்பட்டுவிட்டது. ஆகவே, பள்ளியிலேயே தங்குதலில் ஒரு சோர்வும் நேரிட்டுவிட்டது, இந்த நிலையில் வெளியில் சென்று ஒடியாடவேண்டும் என்ற உந்தல் இயல்பாகவே ஏற்பட்டது. இதற்குரிய காரணங்கள் அப்போது சிந்திக்க நேரம் இல்லை; அதற்குரிய அகவை முதிர்ச்சியும் ஏற்பட வில்லை. உளவியலை நன்கு கற்று வாழ்க்கையில் நல்ல அநுபவம் ஏற்பட்டபிறகு என் இ ள ைம ப் பருவ வாழ்க்கையைப்பற்றிய சிந்தனைகள் எழுகின்றன. இவை உளவியல் அடிப்படையில் இளமையில் மேற்கொண்ட செயல் களை ஆராயத் தூண்டுகின்றன. இந்த ஆராய்ச்சி ஒரு வகையில் சுயசோதனை (Self experiment) ஆகின்றது. குழந்தையின் வளர்ச்சி தொடர்ச்சியாக இருந்தாலும், அதில் சில முக்கியமான பருவங்களை உளவியலறிஞர்கள் பகுத்து ஆய்ந்துள்ளனர், அவை வருமாறு: