பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஈடுபட்ட விளையாட்டுகள் 149 பெரகம்பியில் நன்றாக நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்தப் பயிற்சி கோட்டாத்துரரில் நன்கு திறம் பெற்றது. முதலில் திட்டிலிருந்து நீரில் குதித்தல், கிணற்று மேட்டி லிருந்து குதித்தல், அதன்பிறகு கபிலை ஏற்றத்திலிருந்து குதித்தல் முதலிய செயல்கள் படிப்படியாக வளர்ந்தன. பெரும்பாலும் இவ்வாறு குதித்தலுக்கு ஒரு சில கிணறுகள் தாம் வாய்ப்பாக அமைந்தன. நாளடைவில் நீரில் தலை கீழாகப் பாய்ந்து வெளிவரும் செயலும் கைவரப் பெற்றது. ஒரு சமயம் இவ்வாறு பாயும்பொழுது நீர் ஆழம் போதாமை யால் என் முன்பற்கள் இரண்டு கிணற்று அடித்தரையில் மோதி நுனியில் சிறிது தெறித்துப் போயின. நல்ல வேளை யாகப் பெரிய விபத்து ஒன்றும் நேரிடவில்லை. தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’ என்று அமைந்து, அதிலிருந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டேன். கரட்டாம் பட்டி இராமசாமி என்ற சிறுவன் பணக் காரன். சற்று முரடன் என்னைவிடப் பலசாலியும் கூட. அவனுடன் அடிக்கடி சிறுமோதல்கள் நேரிடுவதுண்டு. என்னை அடிப்பான்; என்னால் சமாளிக்க முடிவதில்லை. நீந்துவதில் அவனுக்கு நல்ல பயிற்சி இல்லை. ஆதலால் கிணற்றில் நீந்தும் போது அவனைச் சற்று நீரில் அழுத்துவென்; துடிதுடித்துப் போவான். பிறகு இருவரும் நல்ல நண்பர்களானோம். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவனுக்குத் திருமணம் ஆயிற்று. செட்டிக்குளத்திலுள்ள ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டான். சிற்றின் பத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். எண்ணெய்க் குளிய லன்று இரவில் சிற்றின்பத்தில் அதிகமாக ஈடுபட்டு சுக ஜன்னி வந்து இறந்து விட்டதாக நான் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அறிந்தேன்.