பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவுக் குமிழிகள்-1 பயன்பட்டது. வெளவால் பட்டத்திற்குச் சாதாரணமான மெல்லிய நூல் போதுமானது; கதவுப் பட்டத்திற்கு கெட்டி யான நூல் (Twine) தேவைப்பட்டது. இருவகை நூல்களும் அந்தச் சிற்றுாரில் அப்போதே மளிகைக் கடையில் கிடைத்தன. பெரகம்பியில் விளையாடாத ஒரு புது வகை விளை யாட்டு வளையம் உருட்டுதல். பழைய இறைசால்களில் உள்ள கெட்டியான சதுரப்பட்டை இரும்பாலான பெரிய வளையமும், உருட்டுக் கம்பியாலான சிறிய வளையமும் இதற்குப் பயன்பட்டன. பெரிய வளையம் நாலணாவுக்கும் சிறிய வளையம் இரண்டனாவுக்குமாகக் கிடைத்தன. இரும்பு வேலை செய்யும் கருமானிடம் இவை கிடைக்கும். தொடக்கத்தில் சிறிய வளையமும், பின்னர் பெரிய வளையமும் உருட்டலானேன். மூன்றடிக் கோலின் நுனிப் பக்கம் ஒர் ஆணியைப் பொருத்தி அதனைக் கொண்டு இந்த வளையங்களை உருட்டவேண்டும். நான்கைந்து சிறுவர் களாகச் சேர்ந்து வளையங்களை உருட்டிக் கொண்டு இரண்டு கல் தொலைவிலுள்ள சுற்றுப்புறச் சிற்றுார்கட்கும் சென்று வருவோம். இந்த விளையாட்டில் பசி, நீர் விடாய் கூட மறந்து விடும். இந்த வளையங்கள் விடுவதற்கு நல்ல ஒற்றை யடிப் பாதைகூடப் போதுமானது. வயல்களில் ஒன்றரைச் சாண், இரண்டு சாண் அகலமுள்ள வரப்புகளிலும் இந்த வளையங்களை உருட்டிச் செல்லும் திறமையையும் வளர்த்துக் கொண்டேன். அந்தக் காலத்தில் அந்தச் சிற்றுார் களில் ஒன்றிரண்டு மிதி வண்டிகள்தாம் இருந்தன. செல்வக் குடும்பங்களிலுள்ள பெரியவர்கள்தாம் இவற்றை வைத்திருந் தனர். வளையங்களை நன்கு உருட்டக் கற்றுக் கொண்டால் பிற்காலத்தில் மிதிவண்டியை நன்கு விடமுடியும் என்ற கொள்கை சிறுவர்களாகிய எங்களிடம் நிலவியது. இது தவறு என்பது மிதிவண்டி விடும் போதுதான் தெளிவாயிற்று