பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஈடுபட்ட விளையாட்டுகள் 147 தச்சர் ஒருவர்- அவர் மிக இளைஞர்-குறைந்த விலைக்கு கடைசல் பம்பரங்களைத் தயாரித்துத் தந்தார். சிறுவர் களாகிய எங்களையே கயிற்றை இழுக்கச் செய்து நல்ல அழகான பம்பரங்களைக் கடைந்து தந்தார். ஒரணா, இரண்டாணாவுக்கு மேல் விலை இல்லை. அந்தக் காலத்தில் இதுவே சிறுவர்களாகிய எங்கட்கு ஒரு பெரிய தொகையே; தச்சருக்கும் நல்ல விலையே. கிட்டிப்புள் அடித்தல்: பெரகம்பியில் ஊருக்குள், தெருவில், விளையாடினேன். அந்த வயதில் அந்த இடம் போதுமான தாகவே இருந்தது. ஆனால் சற்று வளர்ந்த பிறகு தெரு இதற்குப் போதுமானதாக இல்லை. தெருவில் நடமாடு வோர்மேல் அடிக்கப்பெறும் புள் விழுமாதலால், ஏரிக் கரையின் வெளிப்புறமும், ஏரியின் உள்புறமும் வாய்ப்பான இடங்களாக அமைந்தன. யாருக்கும் தொந்தரவு இல்லாமல் விளையாடுவதற்கு இவை நல்ல இடங்களாகப் பயன்பட்டன. பிறர் மீது படாது அடிக்கும் புள் 100 அடி 200 அடி தொலை வில் கூடச் சென்றது. பட்டம் விடுதல்: நான் விளையாடின விளையாட்டுகளில் சிறந்தது. இதையும் ஏரிக்குள்தான் விட்டேன். w கதவுப் பட்டம், வெளவால் பட்டம் என்ற இருவிதப் பட்டங்கள் தயாரிக்கக் கற்றுக் கொண்டேன். கதவுப்பட்டம் பெரியது; சற்றுக் கனமானது. இதனை முங்கில் டப்பைகளால் தயாரிக்க வேண்டும். வெளவால் பட்டம் செய்ய தென்னை விளக்கு மாற்றுக் குச்சிகளே போதுமானது. கடைகளில் கெட்டி யான பழைய செய்தித்தாள்கள், காக்கி நிறக் காகிதம், நல்ல நல்ல வண்ணத்தாள்கள் குறைந்த விலைக்குக் கிடைத்தன. தங்கம்போல் ஒளிவிடும் குருநாதப் பட்டையும் சற்று அதிக விலையில் கிடைத்தது. கதவுப் பட்டத்தை அலங்கரிக்க இது