பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவுக் குமிழிகள்-1 துன்பியல் நாடகத்தைத் திறனாய்ந்த பொழுது இக் கொள்கை கையாளப் பெற்றது. பேதிமருந்து உடலிலிருந்து வேண்டாத பொருள்களை அகற்றுதல் போலவே, ஆன்மாவைச் சூழ்ந்துள்ள அழுக்குப் பொருள்களைத் துன்பியல் நாடகங்கள் அகற்றுகின்றன என்று கருதுவர் இந்த அறிஞர். ஒரு துன்பியல் நாடகத்தைக் காணும் பொழுது நம்மிடம் தேங்கிக் கிடக்கும் சில உணர்வு கள் செயற்பட்டு வெளிப்படுகின்றன. நாமும் கதைத் தலை வனுடைய உணர்வுகளைப் பெறுகின்றோம். அவன் படும் துன்பங்களையெல்லாம் நாம் மானசீகமாக அநுபவிக் கின்றோம். அவனிடம் நடைபெறும் உணர்வுப் போராட்டம் நம்மிடமும் நடைபெறுவதை உணர்கின்றோம். இங்ங்ணமே, விளையாட்டும் நம்மிடம் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் வெளிப்படத் துணை செய்கின்றது. நாகரிக வாழ்வில் Gurrejóðið (Instinct of pugnacity) Q&uff L(\al offg அதிக வாய்ப்பில்லை. நாகரிக உலகில் விளையாட்டில் அந்த வாய்ப்புக் கிடைக்கின்றது. ஒவ்வொரு விளையாட்டும் போலிச் சண்டையே; அதில் குருதி சிந்துவதில்லை. சினமும் வெளிப்படுவதில்லை. ஆனால் அந்த இயல்பூக்கத்திலிருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பினை நல்கு கின்றது. உண்மை உலகங்களில் நேரும் ஏமாற்றங்களுக்கு ஈடு செய்யும் பொருட்டு விளையாட்டு உண்டாகின்றது என லாம். இங்ங்னமே, பாவனை உலகில் குழந்தைகள் மேற் கொள்ளும் விளையாட்டிலும் இவ்வாற்றல்கள் வெளிப்படு வதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரகம்பியில் வி ைள யா டி ன விளையாட்டுகளில் கிட்டியடித்தல், பம்பரம் விடுதல், பிள்ளையார் பந்து அடித்தல் ஆகியவை இங்கும் தொடர்ந்தன. நல்ல நல்ல பம்பரங்கள் கிடைக்க இவ்வூரில் வாய்ப்புகள் ஏற்பட்டன .