பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஈடுபட்ட விளையாட்டுகள் 145 மூலம் வெளிப்படுத்துகின்றன. இக்கொள்கைளை விஞ்சு =#fò pád Gesireiros (Surplus energy theory) srsörgy வழங்குவர் உளவியலார். பிறிதொரு சாரார் கருதுவது பிற்கால வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய வேலைகளை, முன்பே எதிர்பார்த்துக் குழந்தைகளும் பிராணிகளின் குட்டி களும் தங்கள் விளையாட்டில் பழகுகின்றன. பூனைக் குட்டி அசையும் பொருள்களைக் கண்டு விரட்டுதலும், நாய்க்குட்டிகள் ஒன்றோடொன்று புரண்டு கொண்டு சண்டையிட்டுக் கொள்ளுதலும், சிறுவன் போர் வீரனாகவும், சிறுமி பொம்மை பராமரிப்பு செய்பவளாகவும் விளையாடும் விளையாட்டுகளையும் காண்கின்றோம். இவற்றையெல்லாம் இவர்கள் வாழ்க்கை ஆயத்தக் கொள்கை (Preparation for life theory) என்பதில் அடக்கிக் காட்டுவர். மற்றும் ஒரு சாரார் கருதுவது: மனிதபரம்பரை பல்லுழி காலத்தில் அடைந்த அநுபவங்களைக் குழந்தைகள் தம் முடைய குழவிப்பருவத்தில் திரும்பவும் அடைகின்றனர். நாகரிகம் அடைந்த காலத்திலும் குழந்தைகள் ஆதிகால மனிதர்களின் செயல்களில் ஈடுபடுகின்றனர். விளையாட்டில் மரம் தொற்றுதல், வேட்டையாடுதல், குகையமைத்தல், மீன் பிடித்தல் முதலியவற்றைக் காண்கின்றோம். தாய் வயிற்றில் குழந்தை கருவாய் வளரும் காலத்தில் படிப்படி யாகக் கீழ் நிலை உருவங்களைக் காணமுடிகின்றது. இவற்றையெல்லாம் இவர்கள் ஆதிகாலச் செயல்கட்குத் §(5tbulb Qāstairsps' (Recapitulation theory) grairliğdo அடக்குவர். இக்கொள்கைகளைத் தவிர காலுதற் .ெ கா ள் ைக (Cathartic theory) என்ற ஒரு கொள்கை உண்டு. இதனை முதன் முதலில் காட்டியவர் அரிஸ்டாட்டில் என்ற பேரறிஞர். — 10–