பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-19 19. நான் ஈடுபட்ட விளையாட்டுகள் கோட்டாத்தூரில் கல்வியை மிக உற்சாகமாகக் கற்றது போலவே, விளையாட்டுகளில் அதிகமான அக்கறை கொண்டேன். இயல்பாகவே விளையாடும் இயல்புடையவர் கள் சிறுவர்கள் என்பதை அப்பொழுது சிந்திக்க முடியா விடினும் இப்பொழுது சிந்திக்க முடிகின்றது உளவியலை ஆழ்ந்து கற்றமனம் அதனை இப்பொழுது சிந்திக்கின்றது. விளையாட்டுச் செயல் சிறுவர்களிடம் தானாகவே தோன்று கின்றது, அதன்பொருட்டே சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுத் துய்க்கின்றனர். விளையாட்டு சிறுவர்களின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, புலப்பயிற்சி, கற்பனையாற்றல் போன்ற பண்புகளை வளர்க்கின்றது. இதனால்தான் விளை யாட்டுமுறை கல்வி கற்றலில் பயன் படுத்தப்பெறுகின்றது. விளையாட்டைப்பற்றி உளவியலாரிடையே பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவை யாவும் கொள்கை வடிவம் பெற்று விளையாட்டின் உண்மையை விளக்க முயல் கின்றன. என்றாலும் இவை ஒவ்வொன்றும் விளையாட்டு களின் ஏதேனும் ஒரு கூறினையே வற்புறுத்துகின்றன. குழந்தைகளிடமும் பிராணிகளின் கு ட் டி க ளி ட மு ம் தற்காப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான ஆற்றலைவிட அதிகமான ஆற்றல் உள்ளது; தேவைக்குரிய ஆற்றல்போக எஞ்சிய ஆற்றலே விளையாட்டின்மூலம் வெளிப்படுகின்றது. வயிறு நிறைய உண்ட சிங்கங்கள் கர்ச்சிக்கின்றன; உண்டு வயிறு நிறைந்த பறவைகள் பாடுகின்றன. அவ்வாறே குழந்தைகளும் தம்மிடமுள்ள மீறிய ஆற்றலால் களித்து விளையாடுகின்றனர். நீராவிப்பொறி தேவைக்கு அதிகமாகக் சேர்ந்திருக்கும் நீராவியை வெளிப்படுத்துதல் போல பிராணி களும் தம்முடைய மிகுதியான ஆற்றலை விளையாட்டின்