பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் பங்காளி உறவு 143 பழநிக்கு எங்களை இட்டுச் சென்றபோதே அவனையும் கூட்டிச் சென்றிருக்கலாம். இப்படித்தான் அவர் முன் யோசனையின்றிக் காரியங்களைச் செய்வார், ஒருநாள் தன் விருப்பத்தைத் தன் அத்தையிடம் தெரிவித்து ரூபாய் இருபது பெற்று வந்தான். அவன் தந்தையாருக்குத் தெரியாமல் நானும் கணபதியும் பழநி சென்று முடியெடுத்து முருகனை வழிபாடு செய்து திரும்பி வந்தோம் அவன் தந்தையாரும் ரூபாய் இருபதைத் தன் தமக்கையாரிடம் தந்து கடனைத் தீர்த்துக் கொண்டார். அதனை இப்போது நினைந்து பார்க்கின்றேன். இருவரும் அரைக் கிராப்புடன் துறையூர் சென்று படிப்பைத் தொடங்கினோம். இவ்வாறு முடி துறந்தது, நாங்களே குளித்துத் தலைவாரிக் கொள்வதற்கு மிகவும் செளகரியமாக இருந்தது. துறையூரிலிருந்தவரை எங்கட்குக் கிராப்பு வைத்துக் கொள்ளும் துணிவு பிறக்கவில்லை. முசிறியில் படிக்கும்போதும் இரண்டு ஆண்டுகள் வரை எங்கட்கு கிராப்பு வைத்துக் கொள்ளும் துணிவு பிறக்கவில்லை. எஸ். எஸ். எல். சி. வகுப்பு படிக்கும் பொழுது இத்துணிவு பிறந்தது. இருவருமே கிராப்பு வைத்துக் கொண்டோம். எங்களின் இந்நிலையைக் கண்ட என் தம்பியின் தந்தையாரும் தம் வெறுப்பை முகத்தில் காட்டினா ரேயன்றி வாயினால் எதுவும் சொல்லவில்லை. பிள்ளைதான் வயதின் மூத்தால் பிதாவின் சொற் புத்தி கேளார்* என்ற பெரியோரின் வாக்கு அவர் அறியாததா என்ன? 'காலத்திற்கேற்ற கோலம்'தான் என்று நினைந்து வாளா இருந்து விட்டார். 43. விவே. சிந்தா. 2.