பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவுக் குமிழிகள்-1 திருப்பதியில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றத் துணை புரிந்தது போலும். ஏழுமலையான் திருவருள் அப்போது அடங்கிய நிலையில் இருந்திருக்க வேண்டும் எனக் கருது கின்றேன். இன்னொரு பாடல் வேணுகோபாலை உணர்ச்சி பொங்கச் செய்து விடும். கள்ளங்கபடமற்ற அவரது உள்ளம் தீச்செயல்களைக் கண்டாலும் அவற்றைப் பற்றிக் கேட்டாலும் வருந்தும். ஆரம் பூண்ட மணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள் ஈரம் இருக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது வாரம் கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி ஒரம் சொன்ன குடியதுபோல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே." (ஆரம்-பட்சபாதம்; ஒரம்-வஞ்சனை) இந்தப் பாடல் அவர் மனத்தை மிகவும் தொட்டது. இவர் வீட்டருகில் வழக்குரைஞர்கள் பலர் வாழ்ந்தனர். வழக்கறிஞர் வீட்டுக்கு வரும் கட்சிக்காரர்களும் சாட்சி களும் இரவு முன் வேளையில் வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருப்பதுண்டு. இப்பாடல்களின் இறுதியடிகளைச் சொல்லும் போது அவர் மனம் கொதிக்கும். இவர் தம்பி கருப்பண்ணன் நாங்கள் எட்டாவது படிக்கும் போது ஆறாவது பயின்றான். நல்ல பையன். எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் காணப் படுவான். இவன் எட்டாவது வகுப்பிற்கு மேல் பயிலவில்லை. எட்டாவது படித்து முடித்ததும் ஒரு வழக்குரைஞரிடம் 3. டிெ-94